தாயானாய் நீயும்...

ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து
உனையங்கே அமரவைத்தேன்
கண்ணுக்கு இமைபோலக்
காதலுடன் கவனித்தேன்...

உணவளிக்க வந்தாலும்
உர்ரென்று நீ சினக்க
கோபமேதும் கொள்ளாமல்
கனிவுடனே அதை ரசித்தேன்...

எத்தனை பொறுமைகொண்டாய்
எங்கு நீயும் கற்றுக்கொண்டாய்?
பத்திரண்டு நாள்வரைக்கும்
பரிவுடனே அமர்ந்திருந்தாய்...

முத்துப்போல் அலகுகொத்தி
மெல்லமெல்ல ஓடுடைத்து
அத்தனை குஞ்சுகளும்
முகிழ்த்துவர அருகணைத்தாய்...

பக்கத்தில் யாரும்வந்தால்
பகைவர்களைப் பார்ப்பதுபோல்
உக்கிரம் காட்டினாய்
உயிர்த்தாயாய் வளையவந்தாய்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!