காதல் வந்தபோது...

வாராத போதெல்லாம்
சோதனை செய்யாமல்
வந்ததும் காதல்
வேதனை செய்கிறது...

உராயும் பார்வையின்
தீண்டல்கள் பொறுக்காமல்
உறைக்குள் ஆமையாய்
உள்ளம் தவிக்கிறது...

காதலென்று பெயர்சொல்லி
என்
காதினில் ஓதியது
காதல் தேசத்தின்
தேவதையின் குரலோ?

மெல்லிய புன்னகை
சூடிச் சிறுநெஞ்சைத்
கொல்லத் துடித்தது
கனிமொழி வண்ணமோ?

ஏக்கம் அணியவைத்து
இளமையின் வலிமையைத்
நோக்கிச் சிதைத்தது
விழியெனும் மாயமோ?

பூக்கள் சுமந்த ஒரு
புயலாய் என்மனதில்
தாக்குதல் செய்தவளே,
தவிக்கிறேன் காதலியே...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!