நீயா அழைத்தது?

காலை விடியலில்
காதோரம் கிசுகிசுப்பாய்
மாலைப் பொழுதினில்
மனதோடு முணுமுணுப்பாய்
உணவுண்னும் பொழுதினில்
உள்ளெழும் ஒலிக்குறிப்பாய்
கனவோடு அயர்கையில்
கழுத்தோடு குறுகுறுப்பாய்

இன்றென்ன செய்தாயென்று
யாரென்னை வினவுவது?
காதலின் தேவதையோ?
சாதலின் தூதுவனோ?
பாதகமாய் ஏதும்
பழிவரும் உள்ளுணர்வோ?
மாதவருக்கே கிடைக்கும்
மகேசனின் அறிமுகமோ?

எண்ணரிய மனச்சுழலில்
எண்ணிஎண்ணிப் புரண்டு
கண்ணுறக்கம் துறந்து
கண்ணாடி முன்சென்றேன்
என்னையே தெரியலியா?
என்று முகம் கடிந்து
என்னுடைய மனசாட்சி
ஏளனமாய் நகைக்கிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!