அது ஜுரமல்ல...வரம்

அன்று,
களைத்து உடல்சோர்ந்து
காய்ச்சலில் கிடக்கையிலே
அணைத்து அருகமர்ந்து
ஆதரவாய்த் தலைவருடி
அன்பாய்க் குழையவைத்து
அன்னப்பால் கஞ்சியிட்டு
சின்னக்குழந்தை போல
சிறுகரண்டி கொண்டுஊட்டி
குறுக்கி மருந்துசெய்து
குடிக்கவைத்து முதுகுநீவி,
குலச்சாமி திருநீறைக்
கும்பிட்டுப் பூசிவிட்டு
படுக்கையில் படுக்கவைத்து
பக்கத்தில் இருந்த தாயே,

இன்று,
துணைக்கென்று யாருமின்றி
தனித்த ஓர் அறையினிலே
கணிப்பொறியும் கடிகாரமும்
முறைத்தபடி அருகிருக்க
மணமுடித்த மனைவியையும்
மக்களையும் பணிதுரத்த
மூன்றுநாள் ஜுரத்துடன்
முனகிக் கிடக்கிறேன்...
அணைத்தென் அருகிருந்த
அன்பெனும் என் தாயே...
உன்னை
நினைத்துத் தவிக்கிறேன்
அந்தநாள் திரும்பிடுமோ?

கருத்துகள்

  1. வாசிக்கும் போது அழுகை வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. அன்பும் ஆதரவும் இல்லாது போகும்போது வேதனையின் அளவு அதிகரிக்கும். தாயே துணையுடன் இருப்பாய்.

    பதிலளிநீக்கு
  3. //குறளோவியம் said...
    வாசிக்கும் போது அழுகை வருகிறது.//

    வருகைக்கும் வாசித்துக் கருத்துச் சொன்னதற்கும் மிக்க நன்றி குறளோவியம்.

    பதிலளிநீக்கு
  4. //Radhakrishnan said...
    அன்பும் ஆதரவும் இல்லாது போகும்போது வேதனையின் அளவு அதிகரிக்கும். தாயே துணையுடன் இருப்பாய்//

    நிஜம் ரங்கன், நோயோடு தனிமையும் கூடுகையில் நோயின் வேதனை இரட்டிப்பாகிறது.

    கருத்திட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!