விடியல் ரகசியங்கள்

புள்ளினம் பாடும்
பூபாளம் கேட்டுப்
புலர்ந்திடும் புதுவிடியல்

மின்னிடும் பனித்துளி
வாங்கிக் கதிரவன்
பூத்திடும் புன்முறுவல்

எண்ணிய தெல்லாம்
ஈடேற வாழ்த்தியே
விரிந்திடும் எழில்மலர்கள்

பண்ணொலி மாறாமல்
பூமகள் பாதத்தைத்
தழுவிடும் நீரலைகள்

தன்னுயிர் புரந்து
மன்னுயிர் காக்கவும்
சுரந்திடும் ஆநிரைகள்

விண்ணொடு விளையாடி
வேகமாய் இசைத்திடும்
வித்தகக் குயிலினங்கள்

இன்னமும் இனிமையாய்
என்றென்றும் தோன்றிடும்
இயற்கையின் ஓவியங்கள்

புண்ணியம் பண்ணிடல்
வேண்டும் புவியினைப்
புலர்கையில் ரசிப்பதற்கு...

கருத்துகள்

  1. விடியல் ரகசியங்களைக்
    கவிதையில் உடைத்த
    சுந்தரா, வாழ்த்துகள்
    உம் அருங்கவிக்கு

    அன்புடன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    நான் வழங்கும் மகாயோகம்
    என் கவிதைகள்

    பதிலளிநீக்கு
  2. அழகிய உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் நற்கவி நாகரா அவர்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!