ஏன் என் தந்தையே??!

ஏராள நினைவுகள்
கவிந்திருக்கும் இதயம்
தாராளமாய் நெஞ்சில்
தளும்பிநிற்கும் துயரம்...

நான்,
பாராள வேண்டுமென்று
பகலிரவாய் உயிர்வருத்தி
ஏரோட்டிப் பயிர்காத்து
ஏற்றமிட்டு நீரிறைத்து
யார்யாரை யெல்லாமே
எங்கெங்கோ சென்றுபார்த்து
ஊர்மெச்ச உயர்கல்வி
கற்கவைத்து உயர்த்திவிட்டு
சேறோடு உன்பொழுதைக்
கழித்த என் தந்தையே...

இன்று,
ஊராளும் உயர்பதவி
காரோடு பெரும்செல்வம்
சீரோடு வாழ்வதற்குச்
செம்மையான வீடென்று
பேரோடும் புகழோடும்
நானிங்கு வாழ்ந்தாலும்
ஊரோடு பதித்த உன்
சுவடுகளைப் பிரியாமல்
என்னைப்
போராட வைப்பதும் ஏன்?
பொறுமையினைச் சிதைப்பதும் ஏன்?

கருத்துகள்

  1. காலடி மண்ணை விட்டு விட்டு
    வேற்று மண்ணில் காலடி வைப்பதை விரும்பாத தந்தையின் மகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி வல்லி அம்மா...

    பழகிய பூமியையும், பக்கத்து சாமியையும் விட்டுவிட்டு வருவது இயலாதென்று சொல்லுகிறார்கள் என் வீட்டுப் பெரியவர்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!