வாழ்க்கைப் புத்தகம்

வலிகள் தடவிய
வாழ்க்கையின் பக்கங்கள்
புரட்டும் வேளையில்
விழியோர ஈரங்கள்...

இருட்டாய்த் தெரியும்
சில
ஒதுக்கப்பட்ட பக்கங்களில்
விசும்பலாய் ஒலிக்கும்
வேதனைக் குரல்கள்...

யாருக்காகவோ வாழ்ந்து
எதற்காகவோ ஓடி
எதையோ தொலைத்துவிட்ட
இழப்பின் மிச்சங்கள்...

பாசமும் நேசமும்
பழகி அலைக்கழிந்து
வேஷங்கள் கண்டு
வெறுத்த நிழற்படங்கள்...

மண்ணாகிப்போ என்று
மனதிற்குள் சபித்தபடி
கைகுலுக்கிச் சென்ற
காட்சிப் பதிவுகள்...

இவற்றையெல்லாம்
வாசகனாய் வந்து
விழிவிரியப் படித்துவிட்டு
பேச்சின்றித் திரும்பிடும்
மௌன நிகழ்வுகள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!