உறங்கிவிடு மகளே...

உறங்கிவிடு மகளே
இரவுகள் சிறியதுதான்
உறவுகளின் அணைப்பில்
கனவுகளின் கதகதப்பில்
கவலைகள் பழகும்வரை
உறங்கிவிடு மகளே...

இனி,
விடியும் பொழுதுகளில்
வருத்தங்கள் காணநேரும்
படிக்கச் செல்லுகையில்
பாதகம் எதிரில் தோன்றும்
பிடிக்காத நிகழ்வுகளில்
நடித்திடப் பழகவேண்டும்
துடிக்காமல் மனதினைக்
காத்திடத் தெரியவேண்டும்

எதிர்த்துவரும் இடர்கள்
தவிர்த்திடத் துணிவுவேண்டும்
சினம்
துளிர்த்திடும் பொழுதிலும்
வார்த்தையில் பணிவுவேண்டும்
கொதித்திடும் வார்த்தைகள்
கேட்டிடும் பொழுதினில்
பொறுத்திட மனமும்
உறுதியாய் உனக்கு வேண்டும்

ஆகவே மகளே,
அழுகையை உதறிடு
ஆணவம் தொலைத்திட்டு
அறிவினைத் தேர்ந்தெடு
இளமையெனும் காலம்
இருக்கும் வரையினில்
துயரங்கள் தவிர்த்திட்டு
உறங்கிடப் பழகிடு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!