வளைந்து கொடு...

விண்ணில்
வளைந்திருக்கும் காரணத்தால்
வானவில் அழகு

காற்றில்
இசைந்தாடும் மென்மையால்
முல்லைக்கொடி அழகு

சேற்றில்
வளைந்திருக்கும் செழிப்பினால்
கதிருக்கு அழகு

ஆற்றில்
நெகிழ்ந்துநிற்கும் பண்பினால்
நாணலும் அழகு

சொல்லில்
அதிர முகம்சிவந்து
ஆத்திரம்கொள்ளாமல்
வளைந்துகொடுத்துப்பார்...
உன்
வாழ்க்கையும் அழகு.

கருத்துகள்

  1. வளைந்து கொடுக்கும் போது பிறர் ஒடித்துவிடாமல் பார்த்து கவனமாக இருத்தல் வேண்டும். அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  2. புல்லைப் போல் வளைந்தால்
    புயல் வந்தாலும்
    மரம் போல் வீழ வேண்டியதில்லை.

    கவிதை அருமை, வாழ்த்துக்கள் சுந்தரா.

    அன்புடன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    நான் வழங்கும் மகாயோகம்
    என் கவிதைகள்

    பதிலளிநீக்கு
  3. //Radhakrishnan said...
    வளைந்து கொடுக்கும் போது பிறர் ஒடித்துவிடாமல் பார்த்து கவனமாக இருத்தல் வேண்டும். அழகிய கவிதை//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கன்!

    பதிலளிநீக்கு
  4. // I AM naagaraa said...
    புல்லைப் போல் வளைந்தால்
    புயல் வந்தாலும்
    மரம் போல் வீழ வேண்டியதில்லை.

    கவிதை அருமை, வாழ்த்துக்கள் சுந்தரா.//

    நன்றி நாகராஜன் அவர்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!