காட்டிலே மழை...

நீளமான மழைநாளின்
விடியாத மெல்லிரவில்
காளானின் குடைமறைவில்
ஆளான தவளைச்சத்தம்
மீளாமல் துயிலுறங்கும்
மொட்டுகளைத் துயிலெழுப்பும்.

பூப்படைந்த மொட்டுகளின்
புன்னகையில் மதிமயங்கி
புல்லினமும் தலைநிமிர்த்தும்
புள்ளினங்கள் மெய்சிலிர்க்கும்
பூரிப்பாய் மலர்நுழைந்து
புதுவண்டு தேனெடுக்கும்

தேன்குடித்த வண்டுகளின்
தெய்வீக இசையமுதம்
வானகத்துத் தேவர்களின்
வயிற்றுக்கும் உணவாகும்
கானகத்துக் கலையழகில்
மானினங்கள் மகிழ்ந்தோடும்

சோம்பல்கொண்ட சூரியனை
ஆம்பல் கண்டு தலைகவிழும்
காம்புகளில் மதுவழியும்
கவின்மலர்கள் உடைதிருத்தும்
வீம்பாகக் குயிலொன்று
விரகத்தில் குரலெழுப்பும்

கானகத்து மழைநாளின்
கவினழகை நான்கண்டேன்
நான்பெற்ற இன்பமதை
எல்லோரும் பெறவேணும்

கருத்துகள்

  1. அருமையான நிதர்சமான வரிகள் வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி முரளித்தம்பி.

    பதிலளிநீக்கு
  3. கவிதை வரிகளில் தேவர்களின் செவியும் குளிரும் வண்ணம் அனைவரும் இன்பம் பெற வைக்கும் மழை.

    பதிலளிநீக்கு
  4. //கவிதை வரிகளில் தேவர்களின் செவியும் குளிரும் வண்ணம் அனைவரும் இன்பம் பெற வைக்கும் மழை//

    மழையினும் அழகான வரிகள்...
    நன்றி ரங்கன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!