ஒற்றை ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?...

காலணாவுக்குக் கடலைமிட்டாய் வாங்கி
நாலுபேருக்குப் பங்கிட்டுக் கொடுத்ததும்
அரையணாவுக்கு அவல்பொரி வாங்கி
ஆறுபேருக்கு அள்ளிக் கொடுத்ததும்

நாலணாவுக்கு நாட்டுப்பழம் வாங்கி
காலைஉணவுக்கு வயிறாரத் தின்றதும்
எட்டணாவுக்கு எள்ளுருண்டை வாங்கி
தட்டுப்பாடின்றி சுவைத்து மகிழ்ந்ததும்

இப்போது கதையாச்சு இல்லாத நடையாச்சு
முப்போகம் விளைந்தபூமி முழுசுமிங்கு வீடாச்சு
அப்பாவின் சம்பளத்தில் அத்தனை பிள்ளைகளும்
பத்தினியும் வாழ்ந்தகாலம் கனவாகிப் போயாச்சு

பெண்களும் படித்துவிட்டு வேலைக்குப் போயாச்சு
பிள்ளைகள் ஒன்றிரண்டும் ஆயாவின் பொறுப்பாச்சு
பொன்பொருளைப் பின் துரத்தி ஓடிடும் ஓட்டத்தில்
பெண்களும் ஆண்களுடன் போட்டியிட வந்தாச்சு

இன்றைய இந்நிலையினிலே,
ஐயா எனவந்து யாசகம் கேட்பவர்க்கும்
பையிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்கவந்தால்
கையை அசைத்தபடி மறுத்துச் சொல்லுகிறார்
ஒற்றை ரூபாய்க்கு இப்போ என்ன கிடைக்குமென்று...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!