அலையே...கடலலையே...

வந்த அலைசரிந்து
வரும் அலைக்கு வழிகொடுக்கும்
இந்த உலகவாழ்க்கை
இன்னதென்று எடுத்துரைக்கும்
மண்ணில் நுரைகோர்க்கும்
மாலையாக்கி அழகுபார்க்கும்
கண்ணைக் குளிரவைக்கும்
கவியழகு நிறைந்திருக்கும்...

கண்ணெட்டும்வரை பரந்து
கடைவானின் கைகுலுக்கும்
கதிரவனைக் காலையினில்
காதலுடன் வழியனுப்பும்
கதிர்நீலப் பட்டுடுத்தி
நிலமகளை அழகுசெய்யும்
சுதியோடு இசையெழுப்பி
காற்றோடு சதிராடும்...

கப்பலுடன் கதைபேசும்
கரைப்படகைத் தாலாட்டும்
உப்பளங்கள் ஏறிவந்து
உவர்மணியாய் உருமாறும்
சிப்பிக்குள் துகள்நுழைத்து
முத்தாக உருவாக்கும்
செப்பவும் அரிதாகும்
உன்பெருமை பெரிதாகும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!