பசுங்கிளியே தூங்கலியோ?...

ஆடிய பூந்தொட்டில்
அசைதல் நின்றவுடன்
பாடிய தாலாட்டுப்
பாடலது முடிந்தவுடன்

மூடிய பூவிதழ்கள்
மெல்ல விரிவதுபோல்
தேடி விரிந்த கண்கள்
துழாவி வெறுமைகண்டு

வாடி முகம்வருத்தி
வண்ண இதழ்பிதுக்கி
நாடிக் குரலுயர்த்தி
'ம்மா' என்றழைக்கையிலே

பாடுபட்ட ஏழைக்குப்
புதையல் கிடைத்ததுபோல்
ஓடி அருகில்வந்து
உயிரினிக்கச் சேர்த்தணைத்தேன்

தேடிக் கண்டெடுத்த
திரவியமே தீஞ்சுடரே,
பாடி உறங்கவைத்தேன்
பசுங்கிளியே தூங்கலியோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!