வீதியோர விசும்பல்கள்...




கிழிசல் கோணிக்குள்
பசிபோர்த்திய இரவுகள்
விழியோடு தேங்கிவிட்ட
வேதனையே கனவுகளாய்...

வழியோரத் திண்ணைகளே
உறங்கிடும் பள்ளியறை
பழியாகி வலியெடுக்கும்
அனாதையெனும் அவச்சொல்...

பக்கத்தில் படுத்திருக்கும்
பழகிய நாய்க்குட்டி
பசியோடு விலகாத
பாசமும் சுமந்தபடி...

வயிற்றுக்குள் எழுந்தபசி
சுழற்றிச் சிறுகுடலை
முறுக்கிய நோவின்வலி
விழிகளில் நீராக...

சம்பந்தன் அழுதகணம்
சடுதியில் எதிரில்வந்து
செம்பொன் குவளையில்
ஞானப்பால் கொடுத்தவளே

பந்தம் எனக்கிலையோ
பாவமென்று தோணலையோ
இன்னல்கண்ட ஏழைக்கும்
இரங்கிட மாட்டாயோ...

கருத்துகள்

  1. //பந்தம் எனக்கிலையோ
    பாவமென்று தோணலையோ
    இன்னல்கண்ட ஏழைக்கும்
    இரங்கிட மாட்டாயோ...//

    அருமையா இருக்குங்க... உணர்வுகளை சொன்ன விதம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ரசிகன்...

    உங்க ரசனைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. சம்பந்தன் அழுதகணம்
    சடுதியில் எதிரில்வந்து
    செம்பொன் குவளையில்
    ஞானப்பால் கொடுத்தவளே

    பந்தம் எனக்கிலையோ
    பாவமென்று தோணலையோ
    இன்னல்கண்ட ஏழைக்கும்
    இரங்கிட மாட்டாயோ..


    அருமையான வரிகள்.....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!