ஒரு பார்வை பார்ப்பாயா...


விடியல் தொடங்கி
முடியாத அலுவல்கள்
அடிமையாக்கி எனை
ஆளுகின்ற பணிச்சுமை

அலுத்துச் சலித்துவந்து
வீட்டிற்குள் நுழைகையில்
அடித்துக் குழந்தையை
அழவிட்டுக் குரலுயர்த்தி

அப்பாவின் பிடிவாதம்
அப்படியே இருக்குதென்று
இழுத்துத் தரையில்தள்ளி
இளக்காரம் பேசுகிறாய்...

சிரித்துச் சகித்தபடி
உன்
முகத்தைப் பார்க்கிறேன்,
முறைத்து எதிரியைப்போல்
முகம்திருப்பிச் செல்கிறாய்...

வருத்தமா யிருக்குதடி
இறுக்கமான சூழல்கண்டு
உழைத்த மனம்களைத்து
உற்சாகம் தேடுகையில்

எரிக்காதே என்னவளே
என்மனதில் சக்தியில்லை
சிரித்த மலர்போல் நீ
இருக்கவே ஆசைகொண்டேன்

அதற்காக,
வாசலில் நின்று நீயும்
வரவேற்கத் தேவையில்லை
ஆசையும் பாசமுமாய்
ஒருபார்வை பார்ப்பாயா...

கருத்துகள்

  1. அடடா.. அருமை:)

    //அதற்காக,
    வாசலில் நின்று நீயும்
    வரவேற்கத் தேவையில்லை
    ஆசையும் பாசமுமாய்
    ஒருபார்வை பார்ப்பாயா...//

    பாசத்தின் ஏக்கம்.. கலக்கலா இருக்குங்க:)

    பதிலளிநீக்கு
  2. /அப்பாவின் பிடிவாதம்
    அப்படியே இருக்குதென்று
    இழுத்துத் தரையில்தள்ளி
    இளக்காரம் பேசுகிறாய்...

    சிரித்துச் சகித்தபடி
    உன்
    முகத்தைப் பார்க்கிறேன்,
    முறைத்து எதிரியைப்போல்
    முகம்திருப்பிச் செல்கிறாய்...

    வருத்தமா யிருக்குதடி
    இறுக்கமான சூழல்கண்டு
    உழைத்த மனம்களைத்து
    உற்சாகம் தேடுகையில்

    எரிக்காதே என்னவளே
    என்மனதில் சக்தியில்லை
    சிரித்த மலர்போல் நீ
    இருக்கவே ஆசைகொண்டேன்

    அதற்காக,
    வாசலில் நின்று நீயும்
    வரவேற்கத் தேவையில்லை
    ஆசையும் பாசமுமாய்
    ஒருபார்வை பார்ப்பாயா.../

    அழகான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12 மே, 2008 அன்று AM 9:02

    நன்றாக இருக்கிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  4. ரசிகன் said...
    //அடடா.. அருமை:)

    //அதற்காக,
    வாசலில் நின்று நீயும்
    வரவேற்கத் தேவையில்லை
    ஆசையும் பாசமுமாய்
    ஒருபார்வை பார்ப்பாயா...//

    பாசத்தின் ஏக்கம்.. கலக்கலா இருக்குங்க:)//

    நன்றி ரசிகன்... தொடர்ச்சியான உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //திகழ்மிளிர் said...

    அழகான வரிகள்//

    நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  6. //சேவியர் said...
    நன்றாக இருக்கிறது கவிதை.//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேவியர் அவர்களே.

    பதிலளிநீக்கு
  7. அழகான வார்த்தைகளில் உருகிப்போயிட்டேங்க
    கவிதை ரொம்ப நல்லாருக்கு...

    பதிலளிநீக்கு
  8. மிகவும் எதார்த்தமான கவிதை. பார்க்கும் பார்வையிலும் பாசம் வைத்திருக்கக்கூடாதா. அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு
  9. ---888 said...
    அழகான வார்த்தைகளில் உருகிப்போயிட்டேங்க
    கவிதை ரொம்ப நல்லாருக்கு...

    ரசனைக்கு மிக்க நன்றி ---888.

    பதிலளிநீக்கு
  10. //Radhakrishnan said...
    மிகவும் எதார்த்தமான கவிதை. பார்க்கும் பார்வையிலும் பாசம் வைத்திருக்கக்கூடாதா. அருமை சகோதரி.//

    பாசத்தின் எதிர்பார்ப்பினைப் புரிந்துகொள்ளாமலே பலரின் வாழ்க்கை பாலைவனமாகிவிடுகிறது.புரிதலே வாழ்க்கையென்று புரிந்துகொண்டால் சந்தோஷம்தான்...
    மிக்க நன்றி ரங்கன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!