முத்தமிட ஏன் மறுத்தாய்?...


விடியலை முத்தமிட்டு
இரவுகளும் பிரிகிறது
இரவுவந்து முத்தமிடப்
பகல்பொழுதும் மறைகிறது

இமைகள் ரெண்டும் முத்தமிட
உறக்கம் பிறக்கிறது
இதழ்கள் மூடி முத்தமிட
மௌனம் நிலைக்கிறது

நிலவு தந்த முத்தத்தால்
வானம் ஒளிர்கிறது
கதிரவனின் முத்தத்தால்
பூமியும் பொலிகிறது

பூக்களுக்கு முத்தமிட்டு
வண்டுகள் இசைக்கிறது
ஏக்கமுடன் முத்தமிட்டுப்
பறவைகள் களிக்கிறது

கரைதழுவி முத்தமிட்டுக்
கடலலை சிரிக்கிறது
புவியில்மோதி முத்தமிட்டு
மழைத்துளி நனைக்கிறது

எத்தனையோ முத்தங்கள்
அத்தனையும் ரசிக்கிறாய் நீ
என்னைமட்டும் முத்தமிட
வெட்கத்துடன் மறுக்கிறாயே...

கருத்துகள்

  1. சூப்பரான கவிதை.
    ஒவ்வொரு வரியுமே அழகுதான்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க -888,

    ரசித்துப் பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சொந்தமாகி விட்டால்
    முத்தங்கள் எல்லாம்
    மொத்தமாய் கிடைக்கும்

    நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. காதலுக்குத்தான் கண்ணில்லையே...அதனால்தான் காதலனுக்கு இதுகூடப்புரியவில்லையோ என்னவோ...
    நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  5. கேட்கவில்லையோ என்னவோ? இப்பொழுது கேட்டதால் கிடைத்து இருக்கும் காதலிக்கு. ஆனால் காதலன் கேட்காமல் அல்லவா தரவேண்டும். காதலி கேட்க வெட்கப்பட்டால் காதலன் கொடுக்க வெட்கப்படத்தான் செய்வான் :)

    அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!