வேஷமிட்டும் ஜெயிக்கவில்லை...

ரெண்டு வயசிருக்கையில்
கண்ணனாய் வேஷமிட்டு
அன்னையர் சங்கத்தில்
தங்கப்பதக்கம் வென்றேன்...

ஐந்து வயசிருக்கும்போது
ஆண்டுவிழா மேடையிலே
அன்னை தெரசாவாய்
வேடமிட்டுப் பரிசுபெற்றேன்...

ஏழு வயசானபோது
இந்திரா காந்தியாகி
மந்திரியின் கையாலே
சான்றிதழ் பெற்றுக்கொண்டேன்...

பதினொரு வயசினிலே
பாரதியார் வேஷமிட்டு
பள்ளியிலே முதலாய்வந்து
பதக்கத்தைப் பரிசாய்ப்பெற்றேன்...

பதினாறு வயதினிலே
புதுமைப்பெண் உருவமேற்று
மாவட்டப் போட்டியிலே
பாராட்டும் பரிசும்பெற்றேன்...

இன்று,
கல்யாண வயசினிலே
மணப்பெண்ணாய் வேஷமிட்டு
பலமுறை நின்றுவிட்டேன்
இதுவரை ஜெயிக்கவில்லை...

கருத்துகள்

  1. பாசமில்லா
    உலகத்தில்
    நேசத்திற்கு
    வெற்றி கிடைப்பது
    கொஞ்சம் கடினம் தான்

    பதிலளிநீக்கு
  2. நிஜம்தான் திகழ்மிளிர்...
    மணப்பொருத்தம் அமையுமுன்னே பணப்பொருத்தமல்லவா பார்க்கிறார்கள்...
    நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  3. வேஷம் கலைத்துவிடவேண்டியதுதான். பலரின் பரிதாப நிலை சொல்லும் அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  4. ஒரு வேஷம் கலைத்து அடுத்த வேஷத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டிருப்பதுதானே மனித வாழ்க்கை???

    நன்றி ரங்கன்(ராதாகிருஷ்ணன்)!

    பதிலளிநீக்கு
  5. அருமையான் கவிதை.தற்போதைய நிலை வேறுமாதிரி. செக்ஸ் ரேஷியொ படி தற்போது பெண்கள் குறைவாகவும் ஆண்கள் அதிகமாகவு இருப்பதால்,ladies have a choice.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராஜசுப்ரமணியன்! தொடர்ந்து கவிதைகளை வாசித்துக் கருத்துக்களைப் பதிவிடுங்கள். நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!