மனித உயிருக்குப் போட்டா போட்டி


ஆனாலும் இது
அநீதியின் உச்சம்தான்

மனிதனும் இயற்கையும்
மாறிமாறி மோதிக்கொள்ளும்
சோதனையின் காலகட்டம்

ஓராயிரம் உயிரை
நீ
வெடிக்கவைத்து அழித்தால்
நான்
நூறாயிரம் உயிர்களை
துடிக்கவிட்டுச் சிதைப்பேன்
என்று
உலுக்கி உடல் சிலிர்த்து
ஓங்காரமிடுகிறது இயற்கை...

தொடர்ந்திடும் இந்த
யுத்தத்தின் முடிவாக
எஞ்சிடப்போவது
யாராக இருக்கும்?

மமதையில் திரியும்
மனிதத்தின் மிச்சமா
இல்லை,
எதிரொன்றும் இல்லாத
இயற்கையின் எச்சமா
உணர்ந்து உரைத்திட யாரால்முடியும்?

கருத்துகள்

  1. //
    தொடர்ந்திடும் இந்த
    யுத்தத்தின் முடிவாக
    எஞ்சிடப்போவது
    யாராக இருக்கும்?

    மமதையில் திரியும்
    மனிதத்தின் மிச்சமா
    இல்லை,
    எதிரொன்றும் இல்லாத
    இயற்கையின் எச்சமா
    உணர்ந்து உரைத்திட யாரால்முடியும்?//

    சிந்திக்க வேண்டிய கேள்வி:)
    கவிதை நல்லாயிருக்கு:)

    பதிலளிநீக்கு
  2. வாங்க ரசிகன்,

    வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு கவிதை..

    Suggestion: Word verification ஐ தூக்கிடலாமே..

    பதிலளிநீக்கு
  4. //PPattian : புபட்டியன் said...
    நல்லாயிருக்கு கவிதை..

    Suggestion: Word verification ஐ தூக்கிடலாமே..//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புபட்டியன்...
    இதோ தூக்கியாச்சே Word verification ஐ...

    பதிலளிநீக்கு
  5. /தொடர்ந்திடும் இந்த
    யுத்தத்தின் முடிவாக
    எஞ்சிடப்போவது
    யாராக இருக்கும்?

    மமதையில் திரியும்
    மனிதத்தின் மிச்சமா
    இல்லை,
    எதிரொன்றும் இல்லாத
    இயற்கையின் எச்சமா
    உணர்ந்து உரைத்திட யாரால்முடியும்?/

    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் சிறப்பான கவிதை. மனிதம் எஞ்சுமா? அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கையோடு பயணிப்போம்...முடிவுகள் காலத்தின் கையில்.

    நன்றி ரங்கன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!