மேகத்திற்கும் காதல் உண்டு


கருவுற்ற மேகங்கள்
காற்றலையின் கைப்பிடித்து
செறிவுற்ற மலைச்சரிவில்
துளிமழையாய்ப் பிரசவிக்கும்

பெருகியது அருவிவெள்ளம்
பன்மலரின் மணம்பருகி
வழிந்திடும் தேனலையாய்
மண்மடியை நனைத்திறங்கும்

உருகியது மண்ணின்மனம்
உற்சாகம் ஊற்றெடுக்க
விரிந்திடும் ஆற்றுநீராய்
விம்மிக் குமிழியிடும்

வழியெலாம் செழிக்கவைத்து
வளைந்த உடல்களைப்புறவே
சரிந்திடும் கடல்மடியில்
காதல் அங்கு அலைமோதும்.

கருத்துகள்

  1. வருகைக்கு மிக்க நன்றி இனியள்(???)

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை. மிகவும் அர்த்தம் பொதிந்த கவிதை. நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  3. இயற்கையில் மறைந்திருக்கும் அர்த்தங்கள் ஏராளம் அல்லவா...

    நன்றி ரங்கன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!