காதல் சிறையில்...




இரவோடு ஒளிரும்
மின்மினியாய் மனதில்
கனவோடு வந்துவந்து
கலைத்துச் செல்பவளே

சிறகடித்துச் சுதந்திரமாய்
சிறகடிக்க எண்ணாமல்
சிறையாகத் துடிக்கின்றேன்
சித்திரமே உன்விழிக்குள்

முந்தைய பிறவியிலே
என்நெஞ்சில் தைத்தாயோ?
இன்னொரு பிறவியிலும்
என்னோடு தொடர்வாயோ?

கிண்ணத்துத் தேனில்
தத்தளிக்கும் எறும்பினைப்போல்
மெல்லவும் விழுங்கவும்
முடியாத அவஸ்தையடி

சென்றுவா என்று உன்
மெல்லிதழ்கள் சொல்லுகையில்
வென்றிடும் காதல்நோய்
என்னுயிரைக் கொல்லுதடி

பனிக்காற்றில் சிக்கிய
பாவப்பட்ட மலர்போல
தனிக்காட்டில் தள்ளிவிடும்
வேதனையில் துடிக்கின்றேன்

வந்திடுவாய் மலர்விழியே
என்தனிமை போக்கிடவே
சிந்திடும் உன்புன்னகையில்
சந்திரனும் நாணட்டும்!

கருத்துகள்

  1. /சிறகடித்துச் சுதந்திரமாய்
    சிறகடிக்க எண்ணாமல்
    சிறையாகத் துடிக்கின்றேன்
    சித்திரமே உன்விழிக்குள்/

    அருமையான வரிகள்

    நீண்ட நாளுக்கு பிறகு

    தாங்கள் நலமா

    பதிலளிநீக்கு
  2. //சிந்திடும் உன்புன்னகையில்
    சந்திரனும் நாணட்டும்!/

    வரிகள் அழகு.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!