என்னத்தைச் செய்தீங்க... (1)


என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை - முதல்பகுதி)

தெள்ளியதோர் மாலைநேரம்
புள்ளினமோ கூடுதேடும்...
பள்ளிவிட்டு இல்லம்வந்து
ஓய்ந்தமர்ந்தார் செல்வமணி.
அவர்,
பிள்ளைகள் இருவரும்
முற்றத்தில் பாண்டியாட,
கள்ளமில்லா அவர்கள்
புன்னகையைப் பார்த்தபடி,

அன்றாட வாழ்க்கையின்
அழுத்தங்கள் சுமந்ததனால்
முன்நெற்றி முடியெல்லாம்
பின்னோக்கிப் படையெடுக்க,
சுயேச்சையாய்ப் போட்டியிட்டுச்
சுருண்ட வேட்பாளர்போல
அயர்ச்சியாய் வாசலிலே
அமர்ந்திருந்தார் ஆசிரியர்...

அங்கே,
கைநிறையப் பொன்வளையல்
கழுத்திழுக்கும் பொன்வடங்கள்
மின்னலெனக் கண்சிமிட்டி
முகம்காட்டும் மூக்குத்தி,
கன்னத்துச் சதையெழுந்து
காதிரண்டை மறைத்துநிற்க
கிண்ணத்தில் காப்பியுடன்
வந்தமர்ந்தாள் அவர் மனைவி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!