மனதும் உயிரும்
வாடித் தவிக்கையிலும்
பூஞ்சோலை நிழலாய்க்
குளிவித்த நினைவுகள்...
ஆமணக்குச் செடியின்
முள்ளுடைக் காயாய்
மருந்தாகித் தப்பாமல்
பயன் தந்த சுவடுகள்...
சாமரம் வீசிய
வார்த்தைகள் நெகிழ்ச்சியாய்
வந்து விழுந்த
பொன்னான நிமிஷங்கள்...
தேம்பல் எழுந்திட
தழுவிக் கரம்சேர்த்து
அன்புடன் தேற்றி
அரவணைத்த உறவுகள்...
சாம்பல் மூடிய
நெருப்பாய் மனசுக்குள்
சோம்பலின் நிமிஷத்தில்
சூடுதந்த வார்த்தைகள்...
பாம்பின் விஷம்சிந்தி
பாடாய்ப் படுத்தியெனை
ஓங்கி உயரும்படி
ஊக்கம்தந்த எதிர்ப்புகள்...
அத்தனையும் எண்ணி
அமைதியாய் யோசித்தால்
மொத்தமும் அழகுதான்
இப்புவி வாழ்க்கையில்!
Wednesday, October 22, 2008
மொத்தமும் அழகுதான்...
Labels: கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment