குண்டு துளைக்காத
கண்ணாடி மேடை
கண்கொத்திப் பாம்பாய்
நாற்புறமும் காவலர்கள்
குண்டுகள் முழங்கி
அதிரும் ஒலியெழும்ப,
எந்த நிமிடத்தில்
எறிகணை விழுமோஎன்று
அச்சத்தில் விரல்நடுங்க
விடுதலைக் கொடியேற்ற,
உச்சத்தில் படபடக்கும்
கொடியுடன் இதயம்கூட!!!
Tuesday, February 10, 2009
விடுதலை நாள்!!!
Labels: கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
இப்படித்தான்
நாடு உள்ளது.
விடுதலை நாள் என்ற உடன்
வீரர்கள் நினைவிற்கு
வருவதில்லை
விடுமுறைதானே
வருகின்றது
நன்றிகள் திகழ்மிளிர்!
Post a Comment