நெருப்பில் பூக்கள்



நெருப்பில் பூக்கள்

அன்று,
வார்த்தைகள் தடிப்பாக
வழக்குமன்றமானது வீடு...

பொறுப்பில்லாத ஒரு
போராட்டம் அரங்கேற
பார்வையாளராய் ரெண்டு
பாவப்பட்ட குழந்தைகள்...

தாக்குகிற வார்த்தைகள்
தாறுமாறாய் வந்துவிழ
நோக்கிக்கொண்டனர்
குழந்தைகள் இருவரும்

எப்போதோ பார்த்த
ஏதோவொரு திரைப்படம்போல்
அப்பாவுக்கொரு பிள்ளை
அம்மாவுக்கொரு பிள்ளையென்று
பக்கத்துக் கொருவராகப்
பிரிக்கப்படுவோமோ என்ற
அச்சத்தில் துளிர்த்தது
அழுகையின் முதல்துளி...

துப்பாக்கி யிருந்திருந்தால்
தோட்டாக்கள் பாயும்போல
உச்சகட்டத்து வார்த்தைச்சீறல்கள்...

முன்னிரவு வரை
மோதல் தொடர்ந்திருக்க,
பசியும் பதைப்புமாய்
உறங்கிப்போன குழந்தைகளின்
கனவிலும் கூட
கடுமையான சண்டைதான்...

அடித்து எழுப்பியதுபோல்
அதிகாலை விடியலில்
துடித்து எழுந்தது
என்ன நடந்ததோ என்று...

தாறுமாறாய்த் துடிக்கும்
இதயத்தைச் சுமந்தபடி
முகத்தில்
அறையக் காத்திருக்கும்
அதிர்ச்சியை எதிர்நோக்கி,
மெள்ள அறையைவிட்டு
வந்தது ஒரு பிள்ளை...

வெளியே,
முற்றத்துக் குழாயடியில்
முகம்திருப்பி நின்றிருந்த
அப்பாவுக்கு அங்கே
முதுகுதேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா...

அசம்பாவிதம் ஏதும்
இல்லையென்ற நிம்மதியில்
'அப்பாடா' என்றவொரு
ஆசுவாசம் தோன்றினாலும்,

மனதில்
நேற்றைய நினைவுகள்
நெருப்பாய்த் தகித்திட,
பசியும் அயற்சியும்
கோபத்தை விதைத்திட,

"என்னடா மனுஷங்க..."
என்ற எரிச்சலில்
தன்னறைக் கதவை
அறைந்தது சிறுபிள்ளை...

கருத்துகள்

  1. சொல்ல தெரிய வில்லை
    வார்த்தைகள் இயல்பாக,இயற்கையாக
    வந்து இதயத்தைத் தாக்குகின்றன.

    இன்னும் சொல்ல வேண்மெனில்
    வார்த்தையில் விளையாட்டு விளையாடி
    உள்ளீர்கள்


    நெருப்பில் பூக்கள் உருகுவது
    நெஞ்சத்தை உருகின்றது என்பது
    உண்மை

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  2. நன்றி திகழ்மிளிர்!

    தொடர்ச்சியான உங்கள் ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா18 மே, 2009 அன்று PM 12:53

    அப்பா அம்மாவோட பிரச்சனையில் பிள்ளகள்தான் பாவம்னு அழுத்தமா சொல்லியிருக்கீங்க.

    நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா23 மே, 2009 அன்று AM 11:56

    most of the children suffer in one way or another.i personally feel that we always leave them UNUNDERSTOOD.one must always remember the fact that"CHILDREN COME THROUGH US AND NOT FROM US" UNGAL THAMIZHKKAADHAL INNUM INNUM STEADYAHA poha ennudaya vaazhthukkal.innum niraya ezhudhungal.KEEP DOING THINGS AND KEEP DOING IT CONTINUOUSLY.VAAZHHA VALAMUDAN.......

    பதிலளிநீக்கு
  5. //அப்பா அம்மாவோட பிரச்சனையில் பிள்ளகள்தான் பாவம்னு அழுத்தமா சொல்லியிருக்கீங்க.

    நல்லாருக்கு.//

    நன்றிங்க... அடிக்கடி வந்து உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  6. //UNGAL THAMIZHKKAADHAL INNUM INNUM STEADYAHA poha ennudaya vaazhthukkal.//

    இது தீராத காதல்.சந்தேகமே இல்லை, இன்னும் வளரத்தான் செய்யும்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பிள்ளைகளின் கோணத்தில் பெரியவர்களை விளக்கியது அருமை சுந்தரா.

    அய்ற்சிதான் மேலிடுகிறது, பாதிக்கப் படும் குழந்தைகளை நினைத்து

    பதிலளிநீக்கு
  8. நீண்டநாட்களுக்குப்பின் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி வல்லிம்மா.

    பாதிக்கப்படும் பிள்ளைகள் பலரின் வாழ்க்கைப்பாதையே மாறிப்போவதை நினைத்தால் வருத்தம்தான் மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
  9. அடிக்கடி வலைப்பதிவின் வடிவமைப்பு
    மாறிக் கொண்டே இருக்கிறது

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நலம் தானே

    அவ்வப்பொழது வார்த்தைகளில் வண்ணக்கோலம் இட வேண்டுகின்றேன்

    நேரம் கிடைக்கும்போது மட்டும்....

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!