Tuesday, October 27, 2009

முதுமை அத்தியாயம்




திரைகட லோடி

அன்று

திரவியம் தேடிவைத்த

துலுக்காணக் கிழவரின்

அழுக்கான பாத்திரம்

நிரம்பிக் கிடக்கிறது,

மிச்சச் சோறும்

கொச்சை வசவுகளுமாக...

6 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதுமை முகத்திலறைகிறது

நல்ல கவிதை!

சுந்தரா said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...முதல் வருகைக்கும் சேர்த்து.

தியாவின் பேனா said...

///
திரைகட லோடி

அன்று

திரவியம் தேடிவைத்த

துலுக்காணக் கிழவரின்

அழுக்கான பாத்திரம்

நிரம்பிக் கிடக்கிறது,

மிச்சச் சோறும்

கொச்சை வசவுகளுமாக...
///



முதியவர்கள் பற்றிய கவிதை கண்களில்
நீர் பனிக்கிறது

சுந்தரா said...

வாங்க தியாவின் பேனா...

முதல் வருகைக்கு நன்றிகள்!

அன்புடன் மலிக்கா said...

முதுமையின் கொடுமை, அதை அனுபவிக்கும் முன்பே கண்களில் தெரிகிறது,,

நல்ல கவிதை..

சுந்தரா said...

வாங்க மலிக்கா...

வருகைக்கு நன்றி.

அடிக்கடி வாங்க...