நிழல்படமும் நினைவுகளும்


அன்று,
புத்தக அடுக்கினைப்
புரட்டிப்பார்த்தபோது
சிக்கியது அந்தச்
சிறுவயதுப் புகைப்படம்...

மரத்தடி நிழலில்
முகம்கொள்ளாச் சிரிப்புடன் நான்...
அருகில்,
தோளில் கைபோட்டுத்
தோழியொருத்தி...

பொய் சொல்லி
என்னைவிட்டுப்
பிரிந்துசென்ற பூரணி...

பை நிறையப் பொரியோடு
பள்ளிவரும் பார்வதி,
கையெழுத்தால் அனைவரையும்
கவர்ந்துவிடும் கலைவாணி...

அழகழகாய்க் கோலமிடச்
சொல்லித்தந்த அலமேலு,
விசிலடிச்சுப் படம்பார்த்த
விஷயம் சொன்ன வானதி...

பசிவேளை உணவையும்
பேசித்தீர்த்த கதைகளையும்
பேசாமல் எங்களுடன்
பகிர்ந்துகொண்ட  ஆலமரம்...

எத்தனை நினைவுகள்!
எத்தனை சுவடுகள்!!
பொக்கிஷமாய் இளமையின்
நினைவுகளைச் சுமந்திருந்த
சித்திரத்தை வருடினேன்...

புத்தகப்பை நிறையப்
பூரிப்பைச் சுமந்திருந்த
பள்ளி வயதின்
அத்தனை மகிழ்ச்சியையும்
அப்போதும் தந்தது
அந்தப் புகைப்படம்!

கருத்துகள்

  1. மிக அழகு பள்ளி கவிதை... எனக்குள்ளும் வஎது போனது என் பள்ளி நாட்கள்.

    பதிலளிநீக்கு
  2. //பசிவேளை உணவையும்
    பேசித்தீர்த்த கதைகளையும்
    பேசாமல் எங்களுடன்
    பகிர்ந்துகொண்ட ஆலமரம்...//

    ரசித்தேன் இந்தவரிகளை

    நல்லாருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  3. //முனைவர்.இரா.குணசீலன் said...
    நினைவுகளைச் சுமந்த கவிதை அழகு..//

    நன்றிகள் முனைவரே!

    பதிலளிநீக்கு
  4. //சி. கருணாகரசு said...
    மிக அழகு பள்ளி கவிதை... எனக்குள்ளும் வஎது போனது என் பள்ளி நாட்கள்.//

    துயரத்தின் சாயல் படியாத,எத்தனை இனிமையான காலங்கள் அவை...

    நன்றி கருணாகரசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. பிரியமுடன்...வசந்த் said...
    //பசிவேளை உணவையும்
    பேசித்தீர்த்த கதைகளையும்
    பேசாமல் எங்களுடன்
    பகிர்ந்துகொண்ட ஆலமரம்...//

    //ரசித்தேன் இந்தவரிகளை

    நல்லாருக்கு பாஸ்//

    நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பின்னோக்கி அவர்களே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!