Saturday, November 7, 2009

இன்னுமொரு அன்னையாக...

அவள்,
வந்து வளைகுலுங்க
நின்ற தருணத்தில் கவனித்தேன்...

முன்பைவிட,
இன்னும் தளர்ந்திருந்தாள்
கண்கள் சோர்ந்திருந்தாள்...

இடுப்பினில் கைவைத்து
இடையிடையே நீவிவிட்டு
நிறைமாதப் பூரிப்பில்
நின்ற அவளிடம்,

என்ன சொல்வதென்று
யோசித்த அக்கணத்தில்,
புன்னகையைப் பரிசாக்கி
தன் புடவைத் தலைப்பினால்
என்முகம் துடைத்துவிட்டாள்...

என்னவென்று கேட்டபடி
என்னை வருடியது
அவள் பார்வை...

என்னவோ தெரியவில்லை...
எதுவும் சொல்லத்தோன்றாமல்
கண்கள் கலங்கியது எனக்கு.

4 comments:

தியாவின் பேனா said...

அருமை, சூப்பர், ஏக்சலேன்ட்

எதைச் சொன்னாலும் தகும்

க.பாலாசி said...

//என்னவென்று கேட்டபடி
என்னை வருடியது
அவள் பார்வை...

என்னவோ தெரியவில்லை...
எதுவும் சொல்லத்தோன்றாமல்
கண்கள் கலங்கியது எனக்கு.//

அர்த்தமுள்ள வரிகள். ரசிக்கிறேன் தங்களைப்போலவே....

சுந்தரா said...

//தியாவின் பேனா said...
அருமை, சூப்பர், ஏக்சலேன்ட்

எதைச் சொன்னாலும் தகும்//

நன்றிங்க!

சுந்தரா said...

க.பாலாசி said...
//என்னவென்று கேட்டபடி
என்னை வருடியது
அவள் பார்வை...

என்னவோ தெரியவில்லை...
எதுவும் சொல்லத்தோன்றாமல்
கண்கள் கலங்கியது எனக்கு.//

அர்த்தமுள்ள வரிகள். ரசிக்கிறேன் தங்களைப்போலவே....

நன்றி பாலாசி அவர்களே!