நெருப்பிலே பிறந்த சாதி

மேல்சாதிப் பெண்ணும்
கீழ்ச்சாதிப் பையனும்
உறவுகளை உதறிவிட்டு
ஊரெல்லைக் கோயிலிலே
மாலைமாற்றிக் கொண்டார்கள்...

அடியும் தடியுமாக
விடிந்தது அன்றைய பொழுது...

கீழ்ச்சாதித் தெருவெங்கும்
மேல்சாதித் தலைகள்
மோதலில் உடைந்ததோ
இருசாதிச் சிலைகள்...

ஊர்மத்தி ஆலமரம்
உட்கார்ந்த பெரிசுகள்
வேரணைத்து உட்கார்ந்த
வேடிக்கை மனிதர்கள்...

சாதிவிட்டுச் சாதிமாறிக்
கல்யாணம் செய்தவரை
ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க
ஓலமிட்ட உறவுகள்...

கோலமிட்ட தெருக்களெல்லாம்
ஆளரவ மற்றுப்போய்
ஆலமரத் தடியிருந்து
ரசித்ததோ வசவுகள்...

அடுப்பில்
சோறுவைத்ததை மறந்து
கூரைவீட்டு மீனாட்சி
ஊர்வாயைப் பார்த்தபடி
கதைகேட்டு நின்றிருக்க,

ஆளெதுவும் பார்க்காமல்
அந்தஸ்தும் அறியாமல்
கீழ்ச்சாதித் தீ பரவி
மேல்சாதித் தெருவணைக்க
ஊரெல்லாம் ஒன்றாகி
ஓடி யணைத்தது தீயை...

அதற்குள்,
காற்றுக்கும் நெருப்புக்கும்
இரையானது ஒருபகுதி...

சாதி,சாதியென்று
சத்தமிட்ட சனமெல்லாம்
வீதிவேலை முடிந்ததென்று
வீட்டுவேலை பார்க்கச் செல்ல,

ஈரமான விழிகளும்
எரிந்துபோன உடமையுமாய்
அங்கே,
வீடிழந்த சாதியொன்று
வீதியிலே உதயமாச்சு...

இந்தக்கவிதை, யூத்ஃபுல் விகடனின் கவிதைகள் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

கருத்துகள்

  1. வாழ்த்துக்கு நன்றிகள் வல்லிம்மா!

    பதிலளிநீக்கு
  2. சாதியை சாடிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஒரு நிகழ்ச்சியைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். ஒவ்வொரு கருத்தும் மனத்தில் தைப்பது போல் சொல்லக் கற்று இருக்கிறீர்கள்
    சுந்தரா,.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை சுந்தரா!

    //ஈரமான விழிகளும்
    எரிந்துபோன உடமையுமாய்
    அங்கே,
    வீடிழந்த சாதியொன்று
    வீதியிலே உதயமாச்சு... //

    அவலத்தை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. //கீழ்ச்சாதித் தெருவெங்கும்
    மேல்சாதித் தலைகள்
    மோதலில் உடைந்ததோ
    இருசாதிச் சிலைகள்... //

    சண்டையில் உடையாத சிலைகள் எங்க இருக்கு...

    //அங்கே,
    வீடிழந்த சாதியொன்று
    வீதியிலே உதயமாச்சு...//

    அய்யோப்பாவம்....

    நல்ல சிந்தனைக் கவிதை....

    பதிலளிநீக்கு
  6. //velji said...
    சாதியை சாடிய விதம் அருமை.//

    நன்றிகள் வேல்ஜி!

    பதிலளிநீக்கு
  7. //செல்வேந்திரன் said...
    nice one Sundhra...//

    நன்றி செல்வேந்திரன்!

    பதிலளிநீக்கு
  8. //வல்லிசிம்ஹன் said...
    அருமையான ஒரு நிகழ்ச்சியைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். ஒவ்வொரு கருத்தும் மனத்தில் தைப்பது போல் சொல்லக் கற்று இருக்கிறீர்கள்
    சுந்தரா,.//

    நன்றிகள் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  9. //லெமூரியன் said...
    அருமையாய் இருந்ததுங்க...!//

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி லெமூரியன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. //நல்ல கவிதை சுந்தரா!

    அவலத்தை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்!//

    நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

    பதிலளிநீக்கு
  11. //கீழ்ச்சாதித் தெருவெங்கும்
    மேல்சாதித் தலைகள்
    மோதலில் உடைந்ததோ
    இருசாதிச் சிலைகள்... //

    //சண்டையில் உடையாத சிலைகள் எங்க இருக்கு...//

    நிஜம்தான் பாலாசி :)

    //அங்கே,
    வீடிழந்த சாதியொன்று
    வீதியிலே உதயமாச்சு...//

    அய்யோப்பாவம்....

    நல்ல சிந்தனைக் கவிதை....

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!