தரிசு

தரிசாக் கிடக்கிற
மேக்காட்டு பூமிய
வெறுசா வச்சிருந்து
ஒண்ணும் பலனில்ல...

வெரசா அத வித்து
வேற காணி வாங்கிப்போட்டா
மகசூலும் ஆகும்
மனசுக்கும் நிறைவுபாரு....

அம்மா உரக்கச்சொன்னாள்
அறைக்குள் மனமுடைந்து
அழுதாள் அவன் மனைவி...

சும்மா அவளைப்
பழியேற்கவைத்துவிட்டு
அம்மா, சரியென்றான் அவன்...

கருத்துகள்

  1. எதுவும் தரிசில்லை என்பதே நிஜம். நான் ஒரு 25 ஆண்டு காட்டுக்குள் கிடந்தவன். காலையில் வயிறு வத்திப்போய் கட்டப்படும் மாடுகள், காக்கை குருவி,எரும்பு, பாம்பு,ஓனான் சில்லான் என ஆயிரம் வகை உயிர்களுக்குச்,சோறுபோடும் தரிசு பெரிதா. வெளஞ்சு பதுக்கி வச்சு நம்ம தலையிலேயே மொளகரைக்கும் காடு பெரிதா ?
    எல்லாம் சமமான நிலம் தாயே,
    நிலம்.

    ஆனாலும் கவிதை வலியெடுக்க வைக்கிறது தங்கையே. சொல்லம்பு கொடிது.

    பதிலளிநீக்கு
  2. வெளையிறது செழிச்ச நிலம் மத்தது தரிசு, பொட்டக்காடு என்பது ஆணாதிக்க சிந்தனை. மாத்தி யோசிம்மா.
    கண்ணீரத் தொடச்சிட்டு எடுத்துவிடு ரெண்டு சவுக்கு வரி.

    பதிலளிநீக்கு
  3. கவிதையில் நல்ல குத்தல்....

    நன்று...

    பதிலளிநீக்கு
  4. //காலையில் வயிறு வத்திப்போய் கட்டப்படும் மாடுகள், காக்கை குருவி,எரும்பு, பாம்பு,ஓனான் சில்லான் என ஆயிரம் வகை உயிர்களுக்குச்,சோறுபோடும் தரிசு பெரிதா. வெளஞ்சு பதுக்கி வச்சு நம்ம தலையிலேயே மொளகரைக்கும் காடு பெரிதா ? //

    நிஜம்தான்...

    //ஆனாலும் கவிதை வலியெடுக்க வைக்கிறது தங்கையே. சொல்லம்பு கொடிது.//

    சொற்கள் இன்னமும் கொடிதுதான்,செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிக்கும்போது...


    //வெளையிறது செழிச்ச நிலம் மத்தது தரிசு, பொட்டக்காடு என்பது ஆணாதிக்க சிந்தனை. மாத்தி யோசிம்மா.கண்ணீரத் தொடச்சிட்டு எடுத்துவிடு ரெண்டு சவுக்கு வரி.//

    வீட்டு மருமகளை விளையாத நிலமாய்ப்பார்க்கும் புகுந்தவீட்டின் பார்வையில் அமைந்த ஒரு காட்சி மட்டுமே...

    இது ஆணாதிக்கமென்றாலும் இதனை ஆரம்பித்துவைப்பதென்னவோ அநேகமாய்ப் பெண்கள்தான்.

    :)மிக்க மகிழ்ச்சி அண்ணாச்சி.

    வணக்கமும் நன்றிகளும்!

    பதிலளிநீக்கு
  5. //க.பாலாசி said...
    கவிதையில் நல்ல குத்தல்....

    நன்று...//

    வாங்க பாலாசி...

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  6. தரிசு கவிதை.... வலி தாங்கிய, வலி தாக்கிய கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!