என்னோட கதையும் சோகம்தான்!


வெள்ளி செவ்வாய் தவிர
மத்தநாளில் விரதம்
அதுவும்,
வெள்ளை வெறுஞ்சோறு
வெஞ்சனமெல்லாம் இல்ல...

அள்ளிவச்ச சோறும்
ஆடுகோழி தின்னுபோக
எஞ்சிய மிச்சம்தான்,
என் வயிறும் நிறையுதில்ல...

நல்லநாள் பெரியநாளில்
நாலுகுடம் தண்ணி,
வெல்லமிட்ட சோறு
வேகவச்ச கடலை...

பிள்ளைகள் பந்தடிக்கப்
பேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...

இன்னுமென்ன சொல்ல,
என்னுடைய பெருமையின்னு?
பிள்ளையாரா யிருப்பதற்குப்
பெருச்சாளியே தேவலாம்தான்...

**************************************
 
 
இந்தக் கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க,
 
இங்கே  அழுத்துங்க...

கருத்துகள்

  1. ha..haa ganpathi pappa...

    Congrats sundhara!
    nice kavithai :D

    பதிலளிநீக்கு
  2. //பிள்ளைகள் பந்தடிக்கப்
    பேசாத நடுவர்,
    பெண்களின் சண்டையிலோ
    கண்ணவிஞ்ச கடவுள்...//

    கவிதையை ரசிக்கிறேன். இளமை விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. கைகுட்றா கண்ணா .

    அருமையான கவிதை.
    நச்சுன்னு.
    சுரீர்னு.

    பழசுக்கு கடிச்ச மாதிரி,
    சரக்குக்கு தொட்டுக்கிட்ட மாதிரி.

    ரொம்ப பிடிச்சிருக்கு அந்த "பெருச்சாளி" டச்.

    பதிலளிநீக்கு
  4. அடடா பிள்ளையாருக்கு வந்த கவலைக்கு
    என்ன செய்யறது. அற்புதம் சுந்தரா. ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  5. இந்த முடிவை எதிர்பார்க்கலை:)! நல்லா இருக்கு சுந்தரா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பிள்ளையாரா யிருப்பதற்குப்
    பெருச்சாளியே தேவலாம்தான்...

    :)

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை

    நகைச்சுவையாவும் கவிதையெழுதலாம்ன்னு நிரூபிக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  8. //anu said...
    ha..haa ganpathi pappa...

    Congrats sundhara!
    nice kavithai :D //

    நன்றி அனு :)

    பதிலளிநீக்கு
  9. //பிள்ளைகள் பந்தடிக்கப்
    பேசாத நடுவர்,
    பெண்களின் சண்டையிலோ
    கண்ணவிஞ்ச கடவுள்...//

    கவிதையை ரசிக்கிறேன். இளமை விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் பாலாசி!

    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. //ராமலக்ஷ்மி said...
    இந்த முடிவை எதிர்பார்க்கலை:)! நல்லா இருக்கு சுந்தரா. வாழ்த்துக்கள்.//

    :) நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

    பதிலளிநீக்கு
  11. //புதுகைத் தென்றல் said...
    பிள்ளையாரா யிருப்பதற்குப்
    பெருச்சாளியே தேவலாம்தான்...

    :)//

    வருகைக்கு மிக்க நன்றி
    புதுகைத் தென்றல்!

    பதிலளிநீக்கு
  12. //காமராஜ் said...
    கைகுட்றா கண்ணா .

    அருமையான கவிதை.
    நச்சுன்னு.
    சுரீர்னு.

    பழசுக்கு கடிச்ச மாதிரி,
    சரக்குக்கு தொட்டுக்கிட்ட மாதிரி.

    ரொம்ப பிடிச்சிருக்கு அந்த "பெருச்சாளி" டச்.//

    நன்றி அண்ணா :)

    மனசுக்கு உற்சாகமாயிருக்குது.

    பதிலளிநீக்கு
  13. //வல்லிசிம்ஹன் said...
    அடடா பிள்ளையாருக்கு வந்த கவலைக்கு
    என்ன செய்யறது. அற்புதம் சுந்தரா. ஹா ஹா.//

    நன்றி வல்லிம்மா :)

    எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தடிப் பிள்ளையார் இருந்தார். (இப்ப, தனக்குன்னு கூரை போட்டுகிட்டார்) அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இப்படித்தான் தோணும் :)

    பதிலளிநீக்கு
  14. //பிரியமுடன்...வசந்த் said...
    அருமையான கவிதை

    நகைச்சுவையாவும் கவிதையெழுதலாம்ன்னு நிரூபிக்கிறீங்க...//

    நன்றி வசந்த்...நகைச்சுவை மட்டுமில்ல, இன்னும் பலசுவைகளில் கவிதை எழுதலாம்னுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!