அப்பாவும் அவனும்!

வீட்டுக்குள் நுழைகையில்
நள்ளிரவாகியிருந்தது...
உள்ளே,
ஒற்றை விளக்கொளியில்
உறங்காதிருந்தது வீடு...

தேடியெடுத்த பதிலுடன்
தைரியமாய் நுழைகையில்,
வாசல்படி தாண்டி
வந்து விழுந்தன
நெல்லைச் சீமையின்
மண்மணம் மாறாத வசவுகள்...

அப்பாவின் வசவுக்கு
எதிர் வசவு தேடாமல்
சட்டையைச் சுருட்டித்
தலைக்கடியில் கொடுத்தபடி,
மிதிவண்டித் திண்ணையில்
ஒருநொடியில் உறங்கிப்போனான்...

ஒற்றை விளக்கோடு
வசவுகளும் ஓய்ந்திட,
சத்தமின்றித் தூங்கியது வீடு...

முப்பது நிமிடங்கள்
முழுமையாய்க் கரையுமுன்
அவன் தந்தை,
தொட் டெழுப்பினர்
தன் மனைவியை மெதுவாக...

என்னவென்று கேட்டபடி
எழுந்த மனைவியிடம்
சொன்னார் மெதுவாக,
"வெளியே,
பிள்ளைக்குக் கொசுக் கடிக்கும்,
போய் போர்த்திவிட்டு வா" என்று!

கருத்துகள்

  1. ம்...நல்லா இருக்கு.

    'அப்பா' இந்த உறவின் பிரியம் எளிதில் விளங்கிக் கொள்ளவோ ,சட்டெனக் கடக்கவோ முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  2. இதுதாங்க மண்மணம் மாறாத பாசம்ங்கிறது. அருமை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  3. //Mrs.Dev said...
    ம்...நல்லா இருக்கு.

    'அப்பா' இந்த உறவின் பிரியம் எளிதில் விளங்கிக் கொள்ளவோ ,சட்டெனக் கடக்கவோ முடியாத ஒன்று.//

    நிஜம்தாங்க...வெளியே உஷ்ணமாகவும் உள்ளே பனிக்குளிர்ச்சியாகவும் அவ்வப்போது நிஜமுகம் காட்டிக் கலங்கவைத்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. //ராமலக்ஷ்மி said...
    இதுதாங்க மண்மணம் மாறாத பாசம்ங்கிறது. அருமை சுந்தரா!//

    நிஜம்தான் ராமலக்ஷ்மி அக்கா...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கையின் நிச‌த்தை
    வ‌ரிக‌ளில்
    அருமையாக‌
    சொல்லியுள்ளீர்க‌ள்

    பதிலளிநீக்கு
  6. ஒரு சில வரிகளில் தரும் "அப்பா" தத்துவம் அருமை. பாராடுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அப்பா பற்றிய வரிகள் பிடிச்சிருக்கு

    பதிலளிநீக்கு
  8. அப்பா பாசம்

    நல்லா எழுதியிருக்கிங்க ...!

    பதிலளிநீக்கு
  9. //Sangkavi said...
    அதுதாங்க அப்பாங்கிறது.............//

    ஆமாங்க...மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //திகழ் said...
    வாழ்க்கையின் நிச‌த்தை
    வ‌ரிக‌ளில்
    அருமையாக‌
    சொல்லியுள்ளீர்க‌ள்//

    இப்பல்லாம் திகழைப் பார்ப்பதே அருமையாகிவிட்டது.

    நன்றி திகழ்!

    அடிக்கடி வாங்க :)

    பதிலளிநீக்கு
  11. //நிலாமதி said...
    ஒரு சில வரிகளில் தரும் "அப்பா" தத்துவம் அருமை. பாராடுக்கள்.//

    நன்றிகள் நிலாமதி.

    இப்பதான் முதல்முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். அடிக்கடி வாங்க.

    பதிலளிநீக்கு
  12. மிக இரசிந்தேன்... வாக்ஷ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. //தியாவின் பேனா said...
    அப்பா பற்றிய வரிகள் பிடிச்சிருக்கு//

    நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  14. //பிரியமுடன்...வசந்த் said...
    அப்பா பாசம்

    நல்லா எழுதியிருக்கிங்க ...!//

    நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  15. //சி. கருணாகரசு said...
    மிக இரசிந்தேன்... வாக்ஷ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!