கிறக்கம்!

நெஞ்சுமுட்டக் குடித்திருந்தேன்...
கொஞ்சமாய்க் கண்திறக்க
முயற்சித்துத் தோற்றுப்போனேன்...
இழுத்துச் சொருகிக்கொண்டன
இமைகள் ரெண்டும்...

"பாரு இந்தப் பயலை..."என்று
பரிகாசம் பேசினார்கள்
பக்கத்தி லிருந்தவர்கள்...
அவர்களுக்கெல்லாம் புரியவாபோகிறது
என்னுடைய நிலைமை?

மூடிய கண்களுக்குள்
பேசியமுகங்கள் வந்துபோனது...
அவற்றில்,
ஒற்றை முகம் மட்டும்
ஒளிவட்டம் பூசிக்கொண்டு...

காலை நிமிண்டியும்
கன்னத்தைத் தட்டியும்
கலைக்கப் பார்க்கிறார்கள்
என்னுடைய,
கிறக்கமான உறக்கத்தை...

ஆனால்,
நெஞ்சுப் பக்கத்தில்
சின்னதாய்த் துடித்தபடி,
கதகதப்பைக் கொடுத்த
அந்த அருகாமையிலிருந்து
அகலத்தான் முடியவில்லை...

"கொஞ்சியது போதும்,
கொஞ்சம் நிமிர்ந்திருடா..." என்று
பொய்க்கோபம் காட்டி,
நிமிர்த்திவைத்து என்முதுகை
நீவுகிறாள் அம்மா...

கெட்டுப்போனது சுகமான தூக்கமென்று
முட்டிக்கொண்டு வந்தது கோபம்...
இனி,
எப்போ நான் ஏப்பம்விட்டு,
எப்போதான் தூங்குவதாம்?

கருத்துகள்

  1. "கொஞ்சியது போதும்,
    கொஞ்சம் நிமிர்ந்திருடா..." என்று
    பொய்க்கோபம் காட்டி,
    நிமிர்த்திவைத்து என்முதுகை
    நீவுகிறாள் அம்மா...

    நல்ல வரிகள்...........

    பதிலளிநீக்கு
  2. சின்னப்புள்ளைய பத்தி.... ஒரு பெரிய புள்ளையின் கவிதை... ம்ம்ம் நல்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. //saravanan said...
    nanbarkailitam pakirnthu kolla e mail vasathi irunthal nantraka irukkum//

    வருகைக்கு நன்றி சரவணன்!

    விரைவில் மாற்றிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //Sangkavi said...
    "கொஞ்சியது போதும்,
    கொஞ்சம் நிமிர்ந்திருடா..." என்று
    பொய்க்கோபம் காட்டி,
    நிமிர்த்திவைத்து என்முதுகை
    நீவுகிறாள் அம்மா...

    நல்ல வரிகள்...........//

    நன்றி சங்கவி!

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப இனிய,
    யாழினும் இனிய கவிதை.
    பஞ்சுப்பாதங்கள் நினைவில் மோதுகின்றன.
    நல்லா இருக்கு தங்கச்சீ.

    பதிலளிநீக்கு
  6. ரோஸ்விக் said...
    சின்னப்புள்ளைய பத்தி.... ஒரு பெரிய புள்ளையின் கவிதை... ம்ம்ம் நல்ல இருக்கு.

    நன்றி ரோஸ்விக் :)

    //கவிதை(கள்) said...
    நல்லாருக்குங்க

    விஜய்//

    நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  7. //காமராஜ் said...
    ரொம்ப இனிய,
    யாழினும் இனிய கவிதை.
    பஞ்சுப்பாதங்கள் நினைவில் மோதுகின்றன.
    நல்லா இருக்கு தங்கச்சீ.//

    நன்றிங்கண்ணா :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!