பூக்களைச் சிதைக்காதீர்கள்!

என்றைக்கும்போல் அவன்
இரைந்து கொண்டிருந்தான்
அவளைச்,
'சண்டைக்கு வாடி'
என்றழைக்கிற தோரணையில்...

"இன்றைக்கும் என்னிடத்தில்
தோற்பாய் நீ" என்பதுபோல்,
கண்டுகொள்ளாமல்
கர்வமாய் அவன் மனைவி...

ஒன்றுக்கும் உதவாத
ஆணவத்தைக் கட்டிக்கொண்டு
தினம்
சண்டைக் காட்சிகளை
அரங்கேற்றிப் பார்த்திருக்க,

காதலும் கனிவுமாய்
அமைத்துக்கொண்ட வாழ்க்கை
இன்று,
துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச்
சுற்றுகிற படகாக...

எந்த நேரத்தில்
மூழ்குமோ என்று அஞ்சி,
சொந்தங்கள் தேடிப்போய்
பெற்றவர்கள் சொல்லியழ,

இவை
எதுவுமே புரியாமல்,
தாய்மடியின் வெறுமையில்
துவண்டுபோன கன்றுகளாய்,
யார்மடியில் புதையவென்று
புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்...

இப்படியே,
காசும் கர்வமும்
சபலமும் சங்கடமுமாய்
வீட்டுக்குள் வெடிக்கிற
போராட்டச் சத்தத்தில்,
ஒடுங்கிப் போகின்றன
ஒன்றுமறியாத சின்னப்பூக்கள்.

கருத்துகள்

  1. வாவ்............
    அழகான, ஆழமான வரிகள்.........

    பதிலளிநீக்கு
  2. //ஒடுங்கிப் போகின்றன
    ஒன்றுமறியாத சின்னப்பூக்கள்.//

    பூக்களின் நிலையை அழகாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்.

    //துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச்
    சுற்றுகிற படகாக...//

    அருமை சுந்தரா.

    //தாய்மடியின் வெறுமையில்
    துவண்டுபோன கன்றுகளாய்,
    யார்மடியில் புதையவென்று
    புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்..//

    Good flow.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //இவை
    எதுவுமே புரியாமல்,
    தாய்மடியின் வெறுமையில்
    துவண்டுபோன கன்றுகளாய்,
    யார்மடியில் புதையவென்று
    புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்...//

    நல்ல கவிதைங்க... வரிகளின் வடித்த அந்த வலியும் பழைய ஞாபகங்களை கண்முன் நிறுத்துகின்றன.

    அருமை...

    பதிலளிநீக்கு
  4. வலிகளை அப்படியே பதிவு செய்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  5. //இவை
    எதுவுமே புரியாமல்,
    தாய்மடியின் வெறுமையில்
    துவண்டுபோன கன்றுகளாய்,
    யார்மடியில் புதையவென்று
    புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்...
    //

    சத்தியமா இதுமாதிரி நிறைய குடும்பங்கள்ல இன்னும் நடக்குது இதுமாதிரியான சச்சரவுகள்......!

    அதை அப்படியே எழுதியிருக்கீங்க...!

    அப்படியே

    பதிலளிநீக்கு
  6. // துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச்
    சுற்றுகிற படகாக //


    நல்ல உதாரணம்

    பதிலளிநீக்கு
  7. இக்கவிதை எனக்கு அலைபாயுதே படத்தை ஞாபகப்படுத்தியது

    ரொம்ப அழகா நிதர்சன வலிகளை அற்புதமா எழுதியிருக்கீங்க சகோதரி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. //Sangkavi said...
    வாவ்............
    அழகான, ஆழமான வரிகள்.........//

    தொடர்ச்சியாக ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  9. ராமலக்ஷ்மி said...
    //ஒடுங்கிப் போகின்றன
    ஒன்றுமறியாத சின்னப்பூக்கள்.//

    பூக்களின் நிலையை அழகாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்.

    //துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச்
    சுற்றுகிற படகாக...//

    அருமை சுந்தரா.

    //தாய்மடியின் வெறுமையில்
    துவண்டுபோன கன்றுகளாய்,
    யார்மடியில் புதையவென்று
    புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்..//

    Good flow.

    வாழ்த்துக்கள்.

    நன்றி ராமலக்ஷ்மி அக்கா.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கவிதைங்க... வரிகளின் வடித்த அந்த வலியும் பழைய ஞாபகங்களை கண்முன் நிறுத்துகின்றன.

    அருமை...

    வாங்க பாலாசி,

    கருத்துக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. //திகழ் said...
    வலிகளை அப்படியே பதிவு செய்து உள்ளீர்கள்//

    நன்றிகள் திகழ்!

    பதிலளிநீக்கு
  12. பிரியமுடன்...வசந்த் said...

    சத்தியமா இதுமாதிரி நிறைய குடும்பங்கள்ல இன்னும் நடக்குது இதுமாதிரியான சச்சரவுகள்......!

    அதை அப்படியே எழுதியிருக்கீங்க...!

    அப்படியே//

    நானு பார்த்தும் கேட்டுமிருக்கிறேன் வசந்த். பாதிக்கப்படுவது பிள்ளைகளென்று புரியாமலிருக்கிறார்கள் பெற்றவர்கள்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //கா.பழனியப்பன் said...
    // துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச்
    சுற்றுகிற படகாக //


    நல்ல உதாரணம்//

    வாங்க பழனியப்பன்,

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. //கவிதை(கள்) said...
    இக்கவிதை எனக்கு அலைபாயுதே படத்தை ஞாபகப்படுத்தியது

    ரொம்ப அழகா நிதர்சன வலிகளை அற்புதமா எழுதியிருக்கீங்க சகோதரி

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    நன்றிகள் விஜய்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!