கடன், இரவல், இலவசம்

கேட்டுக்கேட்டு வாங்கினான்
கொடுக்கையில் கசந்தது
கோப்பையிலிருந்த காப்பியும்
கொடுத்தவனின் நட்பும்.

************************

கூறைப்புடவையைக் கழற்றிவிட்டு
வேறுபுடவை மாற்றச்சொல்லி
விலகிப்போனார்கள் மற்றவர்கள்...

விலகத்தோன்றாமல்
அறைக்குள்ளேயே இருந்தது,
இரவலாய் நகைகொடுத்த
ராணியக்காவின் பார்வை.

****************************

பாத்திரத்தில் இருந்த
பழங்கஞ்சிச் சோற்றை
பக்கத்துவீட்டிலிருந்துவந்த
கோழிக்குழம்பு வாசனையுடன்
சேர்த்துச் சாப்பிட்டுச்
சிலாகித்துக்கொண்டது,
குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த
கூடைக்காரியின் பிள்ளை.

கருத்துகள்

  1. கடன்:ம்ம், கசக்கத்தான் செய்யும்.

    இரவல்: ராணியக்காவின் பார்வையை அப்படியே படம் புடிச்சுப் போட்டுருக்கீங்க:)!

    இலவசம்: :( !

    முத்தான மூன்று சிந்தனைகள்.
    வாழ்த்துக்கள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  2. //கூறைப்புடவையைக் கழற்றிவிட்டு
    வேறுபுடவை மாற்றச்சொல்லி
    விலகிப்போனார்கள் மற்றவர்கள்...

    விலகத்தோன்றாமல்
    அறைக்குள்ளேயே இருந்தது,
    இரவலாய் நகைகொடுத்த
    ராணியக்காவின் பார்வை.//

    ரசித்த, யோசித்த கவிதை.....

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  3. மூணுமே முத்தான கவிதைகள்...

    ரொம்ப நல்லா இருக்குங்க...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  4. ராமலக்ஷ்மி said...
    கடன்:ம்ம், கசக்கத்தான் செய்யும்.

    இரவல்: ராணியக்காவின் பார்வையை அப்படியே படம் புடிச்சுப் போட்டுருக்கீங்க:)!

    இலவசம்: :( !

    முத்தான மூன்று சிந்தனைகள்.
    வாழ்த்துக்கள் சுந்தரா.

    நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அப்டியே கொஞ்சம் அலாதியா நின்னு வாழ்கையை உற்று நோக்குகிற, அதிலிருந்து பிடித்ததை உலகுக்குச்சொல்லுகிற ரொம்ப இதமான நெறிகள்.
    நல்லாருக்குப்பா.வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உனக்கும்
    உன் எழுத்துக்கும்
    உன் குடும்பத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  6. மூன்றும் யதார்த்தம்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. //Sangkavi said...
    ரசித்த, யோசித்த கவிதை.....

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.......//

    நன்றி சங்க் கவி!

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. //காமராஜ் said...
    அப்டியே கொஞ்சம் அலாதியா நின்னு வாழ்கையை உற்று நோக்குகிற, அதிலிருந்து பிடித்ததை உலகுக்குச்சொல்லுகிற ரொம்ப இதமான நெறிகள்.
    நல்லாருக்குப்பா.வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உனக்கும்
    உன் எழுத்துக்கும்
    உன் குடும்பத்துக்கும்.//

    நன்றி அண்ணா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் கூட.

    பதிலளிநீக்கு
  10. //விஜய் said...
    மூன்றும் யதார்த்தம்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    விஜய்//

    உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும் விஜய்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!