தூக்கம் கெடுத்த கவிதை!

ஊருக்குச் சென்றுவந்தான்
உறவுகளை உதவிகேட்டான்
வாரக்கணக்காய்
வரமறுத்த அதை நினைத்து
நேரங்காலமின்றி
யோசித்துத் தீர்ந்துபோனான்...

போகிறபோக்கில்
எல்லாரும் செய்வதுபோல்
தானும் செய்துவிடத்
தலைகீழாய் நின்றுபார்த்தான்...

விரட்டி விரட்டிப்போனதில்
வீணாய்ப்போனது தூக்கம்
கிடைக்காது நமக்கென்று
கிழித்துப்போட்டது ஏக்கம்...

உறக்கம் பிடிக்காத
இரவுகளின் தனிமையில்
சலிப்பின்றி அடுக்கிவைத்த
வார்த்தைகளில் தொலைந்துபோனான்...

கடைசியாய்,
கோர்த்துப்பார்த்த வார்த்தைகளை
கோபத்தில் கலைத்துப்போட்டான்...
அட,காகிதத்தில் கிடந்தது கவிதை!!!

கருத்துகள்

  1. அருமை சுந்தரா. இதே போன்றதான கவிதை ஒன்றை அனுப்பியுள்ளேன் இதழ் ஒன்றுக்கு! வெளிவந்த பின் பதிவிடுகையில் சொல்கிறேன்! அனுபங்கள்தாமே வரிகளாய் வடிகின்றன பெரும்பாலான பேருக்கு.

    பதிலளிநீக்கு
  2. தூக்கம் கெடுத்த கவிதை... இது ஒரு அழகான அனுபவக்கவிதை....

    பதிலளிநீக்கு
  3. இதை எழுதி என் தூக்கத்தையும் கெடுத்துவிட்டாயே..

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அழகான சிந்தனை

    வாழ்த்துக்கள்

    நம்ம பக்கமும் வாங்க

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

    நன்றி சங்கவி!

    நன்றி கலையரசன்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி கவிகவிதன்!

    நன்றி விஜய்!

    நன்றி குணசீலன்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!