பலசரக்குப் பட்டியல்!

ரெண்டு கிலோ அரிசி
ரெண்டேரெண்டு தேங்காய்
அரைக் கிலோ வெல்லம்
அதே அளவு பருப்பு
அம்பது கிராம் நெய்யி
அதில பாதி முந்திரி
ரெண்டு ரூபாய்க்கு ஏலம்
ரெண்டோ மூணோ பழம்
மனைவி சொல்லச்சொல்ல
மகள் எழுதிக்கொடுத்தாள்...

எழுதி நீட்டிய காகிதத்தில்
பிள்ளையார் சுழி தவிர
எல்லா இடத்திலும்
நிழலாகத்தெரிந்தது,
பாக்கி கேட்டு நச்சரிக்கும்
பலசரக்குக் கடைக்காரரின் முகம்.

கருத்துகள்

  1. வாவ்... அழகான டச்சிங்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அப்ப திருப்பி குடுத்துட வேண்டியதுதானே தலைவா.. :-)

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

    பதிலளிநீக்கு
  4. //வாவ்... அழகான டச்சிங்...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//

    நன்றி கவிஞரே!

    உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. //கலையரசன் said...
    அப்ப திருப்பி குடுத்துட வேண்டியதுதானே தலைவா.. :-)


    :) நன்றி கலையரசன்!

    வாழ்த்துக்கும் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    கவிதை கூடுதலாகப்பொங்குகிறது

    பதிலளிநீக்கு
  7. யதார்த்தம் எப்பவும் சுடும்

    நிதர்சனக்கவிதை

    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. அட, கவிதையும் எழுதுவீங்களா? இன்னிக்குத்தான் பாக்கிறேன்.

    ரொம்ப யதார்த்தமான கவிதைங்க.

    பதிலளிநீக்கு
  9. //காமராஜ் said...
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    கவிதை கூடுதலாகப்பொங்குகிறது//

    நன்றி அண்ணா :)

    என் இனிய வாழ்த்துக்களும் கூட.

    பதிலளிநீக்கு
  10. //திகழ் said...
    அருமை//

    நன்றிகளும் வாழ்த்துக்களும் திகழ்!

    பதிலளிநீக்கு
  11. //விஜய் said...
    யதார்த்தம் எப்பவும் சுடும்

    நிதர்சனக்கவிதை

    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    விஜய்//

    வாழ்த்துக்களும் நன்றியும் விஜய்!

    பதிலளிநீக்கு
  12. //ஹுஸைனம்மா said...
    அட, கவிதையும் எழுதுவீங்களா? இன்னிக்குத்தான் பாக்கிறேன்.

    ரொம்ப யதார்த்தமான கவிதைங்க...//

    :) ஏதோ, கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன் ஹுசைனம்மா.

    உங்களுக்கு என் வரவேற்பும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!