Monday, January 18, 2010

பாதித்த காட்சி!

பூகம்பம் பாதித்துப்
பாழாய்ப்போன பூமி,
எதுவுமே இல்லாமல்
ஏழையான மக்கள்,
அப்படியே காண்பித்து
அச்சப்படுத்தியது தொலைக்காட்சி...

அத்தியாவசியப் பொருளுக்காக
அடித்துப்பிடித்த காட்சியை
அப்படியே சாப்பிட்டது
அடுத்துவந்த காட்சி...

ஒற்றை லட்டு வாங்கிவிட்டு
ரெண்டாம் லட்டு இல்லையென்று
மலைக்குவந்த சாமிகள்
மலையேறாமல் கூச்சல்போட,
மனசு வெறுத்துப்போனது...

காட்சியை மாற்றியும்
மாறாமல் மனசில் தோன்றியது,
ஆனாலும் சாமிக்கு
ஆகாது இந்தப் பாரபட்சமென்று...

12 மறுமொழிகள்:

முனைவர்.இரா.குணசீலன் said...

அழகு!
அருமை!
பொருள் பொதிந்த கவிதை..

பாராட்டுக்கள் நண்பரே..

சுந்தரா said...

மிக்க நன்றி முனைவரே!

விஜய் said...

என்ன இது சாமியையே சுளுக்கெடுக்கிறீங்க

ரொம்ப பிடிக்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்

காமராஜ் said...

ரொம்பவும் நெகிழ்வான வாத்தைகள்.காணச்சகிக்காத காட்சிதான் அது. ஒப்பீடு அழகு தங்கச்சீ. நல்ல கவிதை.

Mrs.Faizakader said...

அழகான வரிகள்

சுந்தரா said...

//விஜய் said...
என்ன இது சாமியையே சுளுக்கெடுக்கிறீங்க

ரொம்ப பிடிக்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்//

நான் எங்கேங்க சுளுக்கெடுத்தேன்? சும்மா சோகத்தைச் சொன்னேன்...அவ்வளவுதான் :)

நன்றி விஜய்!

சுந்தரா said...

//காமராஜ் said...
ரொம்பவும் நெகிழ்வான வாத்தைகள்.காணச்சகிக்காத காட்சிதான் அது. ஒப்பீடு அழகு தங்கச்சீ. நல்ல கவிதை.//

நன்றிங்கண்ணா!

சுந்தரா said...

//Mrs.Faizakader said...
அழகான வரிகள்//

வருகைக்கு மிக்க நன்றி ஃபாயிஷா!

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அழகான கவிதை சகோதரி.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. அப்படித்தான் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததற்கு ஏங்குகிறோம்.

சுந்தரா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகவும் அழகான கவிதை சகோதரி.//

மிக்க நன்றி ரங்கன்!

சுந்தரா said...

//ஹுஸைனம்மா said...
ம்ம்.. அப்படித்தான் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததற்கு ஏங்குகிறோம்.//

:) ஆமா ஹுசைனம்மா...

வருகைக்கு மிக்க நன்றி!

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails