அப்பா...அம்மா...கவிதை!

"புள்ள வந்தானா?"

"ஆமா..."

"புது வண்டியப் பாத்தானா?"

"ஆமா, ஆமா..."

"என்ன சொன்னான்?..."

எதுவும் சொல்லாமல்
ஏறிட்டுச் சிரித்தாள்...

"சொல்லித் தொலையேன்"

"இன்னும் நல்லதாக்
கிடைக்கலையான்னு சொன்னான்"

உரக்கச் சிரித்துவிட்டு
ஓய்ந்தவர் சொன்னார்,
"உன்னை
முதல்முதலில் பாத்தப்ப
என்னநான்  சொன்னேனோ,
அப்படியே தான்
அவனும் சொல்லியிருக்கான்..."

அங்கே,
கோபத்தைக் காண்பிக்க
முயற்சித்துத் தோற்றவளாய்,
குலுங்கிச் சிரித்தாள் அம்மா.

கருத்துகள்

  1. //அங்கே,
    கோபத்தைக் காண்பிக்க
    முயற்சித்துத் தோற்றவளாய்,
    குலுங்கிச் சிரித்தாள் அம்மா.//

    சிரிப்புக்குள் வலியாய் ஒளிந்திருக்கும் இயலாமையை அழகாய் காட்டி விட்டிருக்கிறீர்கள்!

    நல்ல கவிதை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  2. //உரக்கச் சிரித்துவிட்டு
    ஓய்ந்தவர் சொன்னார்,
    "உன்னை
    முதலில் பாத்தப்ப
    என்ன சொன்னேனோ
    அதையேதான் அவனும்
    அப்படியே சொல்லியிருக்கான்..."//

    இது உண்மைக் கவிதை...

    எல்லா வீட்டியும் இந்தப் பதில்தான் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. //ராமலக்ஷ்மி said...
    //அங்கே,
    கோபத்தைக் காண்பிக்க
    முயற்சித்துத் தோற்றவளாய்,
    குலுங்கிச் சிரித்தாள் அம்மா.//

    சிரிப்புக்குள் வலியாய் ஒளிந்திருக்கும் இயலாமையை அழகாய் காட்டி விட்டிருக்கிறீர்கள்!

    நல்ல கவிதை சுந்தரா!//

    நன்றி ராமலக்ஷ்மியக்கா!

    கீற்றில் உங்க கவிதை படித்தேன். என்ன சொல்லிப் பாராட்டுவதுன்னு தெரியலை.இல்லாதவனின் மனதை இயல்பாக அப்படியே வெளிப்படுத்தியிருந்தீங்க. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. //Sangkavi said...
    //உரக்கச் சிரித்துவிட்டு
    ஓய்ந்தவர் சொன்னார்,
    "உன்னை
    முதலில் பாத்தப்ப
    என்ன சொன்னேனோ
    அதையேதான் அவனும்
    அப்படியே சொல்லியிருக்கான்..."//

    இது உண்மைக் கவிதை...

    எல்லா வீட்டியும் இந்தப் பதில்தான் இருக்கும்...//

    நானும் நிறைய்ய இடங்கள்ல பார்த்திருக்கிறேன் சங்கவி :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ஒருவரையொருவர் புன்படுத்தாமல் விகடம் சொல்லிச்சிரிப்பதில் கொஞ்சம் கணம் குறையும். அன்பு இன்னும் இறுக்கமாகும்.
    நல்ல கவிதை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  6. //" உழவன் " " Uzhavan " said...
    அருமை :-)))//

    நன்றி உழவன்!

    பதிலளிநீக்கு
  7. //காமராஜ் said...
    ஒருவரையொருவர் புன்படுத்தாமல் விகடம் சொல்லிச்சிரிப்பதில் கொஞ்சம் கணம் குறையும். அன்பு இன்னும் இறுக்கமாகும்.
    நல்ல கவிதை சுந்தரா.//

    நன்றி அண்ணா!

    நீங்க சொல்லியிருப்பது ரொம்பச் சரி!

    பதிலளிநீக்கு
  8. இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுகள் தான் நமது இந்திய தாம்பத்யத்தின் ஆதாரம்.

    உலக நாடுகள் வியப்பதும் இதை கண்டு தான்

    தங்கள் வரிகளில் அழகு, யதார்த்தம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. நிஜம்தான் விஜய்...மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //"உன்னை
    முதலில் பாத்தப்ப
    என்ன சொன்னேனோ
    அதையேதான் அவனும்
    அப்படியே சொல்லியிருக்கான்..."//

    அதுக்கு இது போதும் என்று செந்தில் ஸ்டைலில் மனதுக்குள் சொல்லியிருப்பாளோ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!