மதிய விடுப்பு!

பத்து நிமிஷம்
தாமதமாய் ஆனதுக்கு
இத்தனை
சத்தம்போட்டிருக்கக்கூடாது...

பார்த்துப் பார்த்து
சமைத்துக் கொடுப்பவள்
அவள்,
என்ன சாப்பிட்டாளென்று
கண்டுகொண்டதில்லை...

படுக்கிறவரைக்கும்
ஓடியாடி உழைக்கிறவள்
உறங்கினாளா என்று
ஒருநாளும் யோசித்ததில்லை...

திறக்க மறுத்த
சாப்பாட்டுப் பாத்திரத்தைத்
வலிந்து திறக்கையில்
உள்ளே
நிறைந்திருந்தது அவள் கைமணம்...

அவள் ஒருவேளை,
அழுதுகொண்டிருப்பாளோ?
திறந்த பாத்திரத்தை
திரும்ப மூடச்சொன்னது மனசு...

முதலாளி திட்டினாலும்
பரவாயில்லை,
இன்று, மதியச்சாப்பாடு
மனைவி கூடத்தான்!

கருத்துகள்

  1. கவிதை நல்லா இருக்கு சுந்தரா .

    பதிலளிநீக்கு
  2. //படுக்கிறவரைக்கும்
    ஓடியாடி உழைக்கிறவள்
    உறங்கினாளா என்று
    ஒருநாளும் யோசித்ததில்லை...//

    நிச்சயமாக யாரும் யோசிப்பதில்லை...

    பதிலளிநீக்கு
  3. ராமலக்ஷ்மி said...
    அருமை சுந்தரா!

    //முதலாளி திட்டினாலும்
    பரவாயில்லை,
    இன்று, மதியச்சாப்பாடு
    மனைவி கூடத்தான்!//

    அப்படிப் போடு! கவிநாயகனைச் சொன்னேன்:)!

    January 25, 2010 5:18 PM

    பதிலளிநீக்கு
  4. வர வர தூள் கிளப்புறீங்க

    யதார்த்த கவிதைகள் உங்களிடம் மட்டுமே கிடைக்கிறது

    விரைவில் தொகுப்பாக வெளியிடுங்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. //காமராஜ் said...

    கவிதை நல்லா இருக்கு சுந்தரா //

    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  6. // Sangkavi said...

    //படுக்கிறவரைக்கும்
    ஓடியாடி உழைக்கிறவள்
    உறங்கினாளா என்று
    ஒருநாளும் யோசித்ததில்லை...//

    நிச்சயமாக யாரும் யோசிப்பதில்லை...//

    நன்றி சங்கவி!

    பதிலளிநீக்கு
  7. //ராமலக்ஷ்மி said...
    அருமை சுந்தரா!

    //முதலாளி திட்டினாலும்
    பரவாயில்லை,
    இன்று, மதியச்சாப்பாடு
    மனைவி கூடத்தான்!//

    அப்படிப் போடு! கவிநாயகனைச் சொன்னேன்:)!//

    நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  8. //வெ.இராதாகிருஷ்ணன் said...

    அருமையான கவிதை சகோதரி.//

    நன்றி ரங்கன்!

    பதிலளிநீக்கு
  9. //விஜய் said...

    வர வர தூள் கிளப்புறீங்க

    யதார்த்த கவிதைகள் உங்களிடம் மட்டுமே கிடைக்கிறது

    விரைவில் தொகுப்பாக வெளியிடுங்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் விஜய்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!