சுமைதாங்கிக் கல்லாக...



அபரிமிதமான ஆசையென்றாலும்
அழகாய்த்தான் அமைந்திருந்தது வீடு...

விருந்தும் வைபவமும்
விமரிசையாய் முடிவடைய
வீட்டைச்
சுற்றிச் சுற்றிவந்து
சந்தோஷப்பட்டார்கள் பிள்ளைகள்...

கட்டி முடித்த வீடு,
கட்டவேண்டிய கடன்களென்று
நெற்றியைச் சுருக்கிக்கொண்டு
கணக்கிட்டுக்கொண்டிருந்தார் தந்தை...

கட்டிலில் படுத்தாலும்
தூக்கம் பிடிக்காமல்,
மொட்டை மாடியில்
நடந்தவரைப் பார்த்துவிட்டு,

திருஷ்டியா யிருக்குமோ
என்று நினைத்தபடி
வட்டப் பூசணியை
வாங்கிக் கட்டினாள் மனைவி...

பட்ட கண்ணெல்லாம்
போயிடும் என்றுசொல்லிக்
கிட்டவந்த மனைவியிடம்
வட்டிக்கணக்குப் பார்த்தபடி
வள்ளென்று விழுந்தார் அவர்...

எட்டிப்போய் நின்றவள்
எரிச்சலுடன் சொன்னாள்,
நாற்பதுக்குமேலே
நாய்க்குணம் என்று
நன்றாய்த்தான் அன்றைக்கே
சொல்லிவைத் தார்களென்று...

சொல்ல விரும்பாத
சுமைகளைச் சுமந்தபடி,
மெல்லத் திரும்பியவர்
மௌனமாய்த் தலையசைத்தார்...

கருத்துகள்

  1. சுமைதாங்கிக் கற்கள் வீடுகளை மட்டுமா தாங்குகின்றன? குடும்பங்களைத் தாங்கியபடியும்...

    அழகான கவிதை சுந்தரா.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அருமையான நடை.. அந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.. மூன்று நாட்களுக்கு முன் தான் எங்கள் வீட்டு க்ரஹப்ரவேசம் நடந்தது..

    பதிலளிநீக்கு
  3. //சொல்ல விரும்பாத
    சுமைகளைச் சுமந்தபடி,
    மெல்லத் திரும்பியவர்
    மௌனமாய்த் தலையசைத்தார்...//

    நல்லாயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  4. //ராமலக்ஷ்மி said...
    சுமைதாங்கிக் கற்கள் வீடுகளை மட்டுமா தாங்குகின்றன? குடும்பங்களைத் தாங்கியபடியும்...

    அழகான கவிதை சுந்தரா.

    வாழ்த்துக்கள்!//

    நன்றி அக்கா!

    பல இடங்களில், இப்படிப்பட்ட சுமைதாங்கிகளாயிருப்பவர்களின் தியாகங்கள் புரிந்துகொள்ளப்படாமலே போய்விடுவதுதான் வருத்தமான விஷயம்.

    பதிலளிநீக்கு
  5. //நட்பு said...
    அருமையான நடை.. அந்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.. மூன்று நாட்களுக்கு முன் தான் எங்கள் வீட்டு க்ரஹப்ரவேசம் நடந்தது..//

    முதல் வருகைக்கு நன்றிகள் நட்பு!

    புதுவீடு மனநிறைவையும், மனதில் மகிழ்ச்சியையும் என்றென்றும் வழங்கட்டும்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. //Sangkavi said...
    //சொல்ல விரும்பாத
    சுமைகளைச் சுமந்தபடி,
    மெல்லத் திரும்பியவர்
    மௌனமாய்த் தலையசைத்தார்...//

    நல்லாயிருக்குங்க...//

    நன்றி சங்கவி!

    பதிலளிநீக்கு
  7. அமர்க்களமாக நடந்த கிரஹப் பிரவேசத்தின் இரண்டு சுமைதாங்கிகற்களாக இருக்க வேண்டியவர்கள்
    முரன்பட்டால் வல்தான். வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  8. அழகிய கவிதை மீண்டும் படித்தேன், அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு
  9. சொல்லமுடியாத சுமைதான் கடன்.
    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  10. யதார்த்தம் = சுந்தரா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  11. //திகழ் said...

    அருமை//

    நன்றி திகழ் :)

    பதிலளிநீக்கு
  12. //வல்லிசிம்ஹன் said...

    அமர்க்களமாக நடந்த கிரஹப் பிரவேசத்தின் இரண்டு சுமைதாங்கிகற்களாக இருக்க வேண்டியவர்கள்
    முரன்பட்டால் வல்தான். வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சுந்தரா.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வல்லிம்மா.

    //முரன்பட்டால் வல்தான்//

    இதுதான் சரியா புரியல.

    பதிலளிநீக்கு
  13. //வெ.இராதாகிருஷ்ணன் said...

    அழகிய கவிதை மீண்டும் படித்தேன், அருமை சகோதரி.//

    வாங்க ரங்கன்

    மிக்க மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
  14. //காமராஜ் said...

    சொல்லமுடியாத சுமைதான் கடன்.
    நல்ல கவிதை.//

    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  15. //விஜய் said...

    யதார்த்தம் = சுந்தரா

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    மிக்க நன்றி விஜய்.

    தொடர்ச்சியான உங்கள் வருகையும் கருத்துக்களும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!