நாடகம்!

ஓடுகிற வாழ்க்கையில்
உயிர்கள்
ஓடிக்கொண்டேதான் இருக்கிறது...

காணுகிற கனவுகளைக்
கண்ணில் சுமந்தபடி...

மூடுகிற கதவுகளை
முட்டித் திறந்தபடி...

ஆளுகிற ஆசைகளை
அடையத் துடித்தபடி...

நாடுகிற பொருள்களைத்
தேடிச் சலித்தபடி...

கூடுகிற உறவுகளில்
குற்றம் கண்டபடி...

வாடுகிற நிகழ்வுகளில்
வருந்தித் தோய்ந்தபடி...

வீழுகிற தருணத்தில்
வெறுப்பை உமிழ்ந்தபடி...

ஆட்டுகிற கயிற்றின்
அசைவுக் கேற்றபடி
ஆடி நடிக்கிறது,
நூல்
அறுகிற நாள்வரைக்கும்!

கருத்துகள்

  1. நூல் அறுந்து போன பின்னரும் பெயரை வைத்து நாடகங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. //ஆட்டுகிற கயிற்றின்
    அசைவுக் கேற்றபடி
    ஆடி நடிக்கிறது,
    நூல்
    அறுகிற நாள்வரைக்கும்!//

    அருமை...

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசம் தோழி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. //V.Radhakrishnan said...
    நூல் அறுந்து போன பின்னரும் பெயரை வைத்து நாடகங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.//

    நன்றிகள் ரங்கன்!

    பதிலளிநீக்கு
  5. //Sangkavi said...
    //ஆட்டுகிற கயிற்றின்
    அசைவுக் கேற்றபடி
    ஆடி நடிக்கிறது,
    நூல்
    அறுகிற நாள்வரைக்கும்!//

    அருமை...//

    நன்றி சங்கவி!

    பதிலளிநீக்கு
  6. //விஜய் said...
    அட்டகாசம் தோழி

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    நன்றிகள் விஜய் :)

    பதிலளிநீக்கு
  7. மடை திறந்த வெள்ளமென வார்த்தைகள் பொங்கிப் பிரவாகமாகி விமர்சித்து விட்டுள்ளன வாழ்க்கை எனும் நாடகத்தை.

    வெகு வெகு அருமை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  8. //ராமலக்ஷ்மி said...
    மடை திறந்த வெள்ளமென வார்த்தைகள் பொங்கிப் பிரவாகமாகி விமர்சித்து விட்டுள்ளன வாழ்க்கை எனும் நாடகத்தை.

    வெகு வெகு அருமை சுந்தரா!//

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!