வீட்டு அழைப்புகள்!

எடுத்தவுடன் மௌனம்,
அடுத்தவார்த்தை 'நான் தான்',
தொடுத்துப் பேசிட
வார்த்தைகள் தேடி
தோற்றுத் தொடருகிற நிமிஷங்கள்...

சொற்களைச் சேர்க்கச்
சிரமப்படுகிறாளென்று
இக்கரையிலிருந்தே
அப்பட்டமாய்த் தெரியும்...

வேளாவேளைக்குச் சாப்பிடு,
வாரம் ஒருமுறை கூப்பிடு
திக்கித்திக்கி வந்துவிழும்,
திரும்பத்திரும்பக் கேட்கும்
தொலைபேசி வார்த்தைகள்...

ஒருமைக்குத் தாவி
ஒற்றை ஒற்றையாய்ச்
சொல் உதிர்த்து,
நெருப்புப் பற்றவைத்து
நீங்கிப்போவாள் அவள்...

அலையடிக்கும் கடல்
ஆயிரமாயிரம் மைல்
அடைத்திருக்கும் கதவு
அத்தனையும் தாண்டி,
அலைக்கழித்துக்கொண்டிருக்கும்
அவளுடைய குரல்...

நினைவெல்லாம் செயலிழந்து
நிற்கும் தருணத்தில்,
நனைந்துபோன
இமைகள் மட்டும்
ஞாபகமாய்ச் சொல்லும்,
பிரிவையும் ஜெயித்துநிற்கும்
காதலின் அர்த்தத்தை...!

கருத்துகள்

  1. நல்லாயிருக்குங்க கவிதை.

    உணர்வு ரீதியான கவிதை, அருமை.

    பதிலளிநீக்கு
  2. சுந்தரா ...

    எந்தக் கவிதையிலும்
    எழுத்தை வீணடிக்காத
    சிக்கனம் உனது
    ( ஒருமைக்கு மன்னிக்க)
    உட்கார்ந்து யோசிக்கவிடாமல்
    சடீரெனத் தாக்கும் எளிமை.
    வாசித்துவிட்டு மீண்டும் மீண்டும்
    யோசிக்க வைக்கிறாய்
    ஒவ்வொரு முறையும்.
    இன்னும் எல்லாம் தகும்
    என் தங்கைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. படிக்கும் பொழுது நானும் நினைவுநதியில் முழ்கி விட்டேன்.

    எப்பொழுதும் போல தங்களுக்கே உரித்தான நடையில் கவிதை சிறப்பாக இருக்கிறது.

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  4. ஒருமைக்குத் தாவி
    ஒற்றை ஒற்றையாய்ச்
    சொல் உதிர்த்து,
    நெருப்புப் பற்றவைத்து
    நீங்கிப்போவாள் அவள்...




    அவளின் வார்த்தைகளை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன?
    அருமையான கவிதை,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. எப்பொழுதும் போல் உங்கள் முத்திரைக்கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. //அகநாழிகை said...
    நல்லாயிருக்குங்க கவிதை.

    உணர்வு ரீதியான கவிதை, அருமை.//

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
    அகநாழிகை!

    பதிலளிநீக்கு
  7. //எந்தக் கவிதையிலும்
    எழுத்தை வீணடிக்காத
    சிக்கனம் உனது
    ( ஒருமைக்கு மன்னிக்க)//

    தங்கை ரொம்ப சிக்கனம்னு சொல்லிட்டு, அண்ணன் ரெண்டு வார்த்தைகளை உபரியா செலவழிச்சு கஷ்டப்படுத்திட்டீங்க.

    //வாசித்துவிட்டு மீண்டும் மீண்டும்
    யோசிக்க வைக்கிறாய்
    ஒவ்வொரு முறையும்.
    இன்னும் எல்லாம் தகும்
    என் தங்கைக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் அண்ணா.

    ஏதோ எழுதுகிறோம் என்ற எண்ணத்தை மாற்றி, என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது உங்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. //திகழ் said...
    படிக்கும் பொழுது நானும் நினைவுநதியில் முழ்கி விட்டேன்.

    எப்பொழுதும் போல தங்களுக்கே உரித்தான நடையில் கவிதை சிறப்பாக இருக்கிறது.

    அன்புடன்
    திகழ்//

    மிக்க மகிழ்ச்சி திகழ்.

    நன்றியுடன்...

    பதிலளிநீக்கு
  9. pavithrabalu said...
    ஒருமைக்குத் தாவி
    //ஒற்றை ஒற்றையாய்ச்
    சொல் உதிர்த்து,
    நெருப்புப் பற்றவைத்து
    நீங்கிப்போவாள் அவள்...




    அவளின் வார்த்தைகளை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன?
    அருமையான கவிதை,வாழ்த்துக்கள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் பவித்ராபாலு!

    பதிலளிநீக்கு
  10. //விஜய் said...
    எப்பொழுதும் போல் உங்கள் முத்திரைக்கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    மகிழ்ச்சி விஜய்...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. உணர்வு ரீதியான கவிதை, அருமை.பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  12. வீட்டு அழைப்புகள்.. உள்ளங்களின் உணர்வுகள் அப்படியே..அப்படியே.. அருமை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  13. //அன்புடன் அருணா said...
    உணர்வு ரீதியான கவிதை, அருமை.பூங்கொத்து!//

    வாங்க அருணா...

    பூங்கொத்துக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  14. //கண்மணி/kanmani said...
    உணர்ந்து சொல்லியிருக்கீங்க.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்மணி!

    பதிலளிநீக்கு
  15. //ராமலக்ஷ்மி said...
    வீட்டு அழைப்புகள்.. உள்ளங்களின் உணர்வுகள் அப்படியே..அப்படியே.. அருமை சுந்தரா!//

    மிக்க நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!