கல்யாண பாக்கியம்!


பொழுது விடியுமுன்னே
நடந்தது பாக்கியத்தின் கல்யாணம்...

அழகாயிருந்த ஒரு
அம்மியை மிதிக்கச்சொல்லி,
அருந்ததியைக் காட்டுகையில்
இருட்டுத்தான் தெரிந்தது...

மெட்டிபோட்ட நிமிஷத்தில்,
அங்கே குட்டிப் பூகம்பம்...
காலில்,
தங்கக்கொலுசு இல்லையென்று
நாத்தனார் குரலெழுப்ப,

கண்ணில் நீர் சுமந்தவளின்
கையைப் பிடித்துக்கொண்டு,
கல்யாண மேடையைக்
கரகரவென்று சுற்றிவந்தது
ஒரு கூட்டம்...

எட்டிநின்றவர்கள் வீசிய பூக்கள்
கிட்டத்திலிருந்தவர்களின்
கோபப் பார்வைபட்டுச்
சுட்டதுபோலிருந்தது அவளுக்கு...

மணமகன் அறைக்குள் வந்ததும்
மாமியார் சொன்னார்,
பாக்கி நகைபோடாம
பால்பழம்கூடக் கிடையாது என்று...

பதைத்துத் திரும்பினாள் பாக்கியம்...
பக்கத்தில்,
பிடித்துவைத்த பிள்ளையாராய்ப்
பேசாமலிருந்தான்,
பத்துநிமிஷம் முன்னால்
அவள்
பாதம் பிடித்த மாப்பிள்ளை!

கருத்துகள்

  1. எப்பொழுதும் போல்
    உங்களுக்கு நிகர் நீங்களே
    என்பதைச் சொல்லுகிறது கவிதை

    கண்முன்னே காட்சியாய் கவிதை

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. தலைப்பையும்
    நாயகியின் பெயரையும் இணைத்து எழுதியது வெகு அருமை

    பதிலளிநீக்கு
  3. வாங்க திகழ்!

    மிக்க மகிழ்ச்சி :) நன்றியும் கூட!

    பதிலளிநீக்கு
  4. செவுனி அடி என்பார்களே அது இதுதானா ?

    வாழ்த்துகள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. பாக்கியத்துக்குக் கிடைத்தது பாக்கியம்தானா?

    இப்படிப் பிடித்து வைத்தப் பிள்ளையராய்ப் பேசாதிருக்கும் பிள்ளைகள்தான் எத்தனை பேர்?

    நல்ல கவிதை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  6. //உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
    கவிதை அருமை//

    நன்றி உலவு!

    பதிலளிநீக்கு
  7. /ராமலக்ஷ்மி said...
    பாக்கியத்துக்குக் கிடைத்தது பாக்கியம்தானா?

    இப்படிப் பிடித்து வைத்தப் பிள்ளையராய்ப் பேசாதிருக்கும் பிள்ளைகள்தான் எத்தனை பேர்?
    /

    உண்மை தான்

    பதிலளிநீக்கு
  8. //தங்கக்கொலுசு இல்லையென்று
    நாத்தனார் குரலெழுப்ப,//

    //மணமகன் அறைக்குள் வந்ததும்
    மாமியார் சொன்னார்,
    பாக்கி நகைபோடாம
    பால்பழம்கூடக் கிடையாது என்று...//

    இவர்களும் பெண்ணாய் பிறந்த பாக்கியவதிகள்தானே...!

    பதிலளிநீக்கு
  9. பிரியமுடன்...வசந்த் said...
    //தங்கக்கொலுசு இல்லையென்று
    நாத்தனார் குரலெழுப்ப,//

    //மணமகன் அறைக்குள் வந்ததும்
    மாமியார் சொன்னார்,
    பாக்கி நகைபோடாம
    பால்பழம்கூடக் கிடையாது என்று...//

    இவர்களும் பெண்ணாய் பிறந்த பாக்கியவதிகள்தானே...!//

    பெண்களுக்குப் பல இடங்களில் பெண்களேதான் எதிரிகள்...

    நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!