நித்திய ஆனந்தம் தேடி...

ஒரு முகத்தை மறைத்து
இன்னொன்றைக் காட்டினார்கள்,
சாமியார் ஒருவரும்
சபலமுற்ற ஒருத்தியுமாக...

அட,
ரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...

ஏமாந்த கூட்டத்தின்முன்
இருவரும் நடிக்கிறார்கள்
அவள் திரையிலும்,
அவன் தினசரி வாழ்க்கையிலுமாக...

கருத்துகள்

  1. நறுக்கெனச் சொன்னீர்கள் சுந்தரா அந்த ரெண்டாவது பத்தியில்!

    பதிலளிநீக்கு
  2. //அட,
    ரெண்டுபேருமே நடிகர்களென்று
    துண்டுபோட்டாற்போல்
    சொல்லியிருக்கலாம்...//

    சரிதான் சொல்லியிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. ரெண்டுபேருமே நடிகர்களென்று
    துண்டுபோட்டாற்போல்
    சொல்லியிருக்கலாம்...

    whatever we have written in 2000 posts, you have explained in 2 lines neatly

    பதிலளிநீக்கு
  4. சுருக்கெனச் சொல்லிவிட்டீர்கள் சுந்தரா.
    கவிதை அழகு.

    பதிலளிநீக்கு
  5. இந்த சாமியாருக்கு சாமரம் வீசிய குமுதத்தையும், இலக்கியவாதிகளையும் விட்டு விட்டீரே நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை.

    இரண்டு பேருமே நடிகர்கள் தான் உண்மை.

    பதிலளிநீக்கு
  7. //ராமலக்ஷ்மி said...

    நறுக்கெனச் சொன்னீர்கள் சுந்தரா அந்த ரெண்டாவது பத்தியில்!//

    நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  8. //பிரியமுடன்...வசந்த் said...

    //அட,
    ரெண்டுபேருமே நடிகர்களென்று
    துண்டுபோட்டாற்போல்
    சொல்லியிருக்கலாம்...//

    சரிதான் சொல்லியிருக்கலாம்//

    வாங்க வசந்த்...நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //அட,
    ரெண்டுபேருமே நடிகர்களென்று
    துண்டுபோட்டாற்போல்
    சொல்லியிருக்கலாம்...//
    சூப்பர்

    பதிலளிநீக்கு
  10. //ஏமாந்த கூட்டத்தின்முன்
    இருவரும் நடிக்கிறார்கள்
    அவள் திரையிலும்,
    அவன் தினசரி வாழ்க்கையிலுமாக..//


    நச்சுன்னு இருக்குங்க..

    பதிலளிநீக்கு
  11. இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா சகோதரி, அருமையான கவிதை. சமூக அவலம் நடிப்பவர்களால் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அருமை. வாழ்வில் நடிப்பு சாமி....யார் மக்களை காப்பாத்துவது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. //யாஹூராம்ஜி said...

    ரெண்டுபேருமே நடிகர்களென்று
    துண்டுபோட்டாற்போல்
    சொல்லியிருக்கலாம்...

    whatever we have written in 2000 posts, you have explained in 2 lines neatly//

    முதல் வருகைக்கு வரவேற்புகளும், நன்றிகளும் ராம்ஜி!

    பதிலளிநீக்கு
  15. //காமராஜ் said...

    சுருக்கெனச் சொல்லிவிட்டீர்கள் சுந்தரா.
    கவிதை அழகு.//

    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  16. //மர்மயோகி said...

    இந்த சாமியாருக்கு சாமரம் வீசிய குமுதத்தையும், இலக்கியவாதிகளையும் விட்டு விட்டீரே நண்பரே..//

    :) வாங்க மர்மயோகி (உங்க பெயரே ஏதோ சாமியார் ரேஞ்சுக்கு இருக்குது)

    முதல் வருகைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  17. அக்கா.. கவிதை அருமை அக்கா..

    இப்போதெல்லாம் ஏன் மன்றத்திற்கே வருவதில்லை. வாருங்கள் அக்கா..

    vaigaihari@gmail.com மெயிலில் தொடர்பு தாருங்கள் அக்கா...
    நன்றி

    சிவஹரி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!