அள்ளித் தெளிக்கிற வார்த்தைகள்!

தெருவுக்கெல்லாம் தெரிந்துபோனது
அவன்
தோற்றுப் போனானென்று...

சின்ன வயசுமுதல்
செய்தகுற்றம் அத்தனையும்
அள்ளியெடுத்து
அவனோடு சேர்த்துவீசித்
தள்ளிவைத்தார்கள்
தெருவாசல் திண்ணையில்...

பசித்திருந்த வயிறும்
படபடக்கும் இதயமுமாக
விழித்துக்கொண்டது
இன்னொரு பகல்...

எல்லா வற்றையும்
இரவோடு மறந்துவிட்டு
அவனை,
உள்ளே அழைத்துக்கொண்டது வீடு...

ஆனால்,
அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
அலைந்துகொண்டிருந்தன
அக்கம் பக்கமெல்லாம்...

கருத்துகள்

  1. ஆறாதே என்றும் நாவினால் சுட்ட வடு.

    காட்சி கண்முன் விரிய..

    //அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
    அலைந்துகொண்டிருந்தன
    அக்கம் பக்கமெல்லாம்...//

    எம்மையும் சுற்றுவது போன்றதொரு பிரமை. கவிதை அருமை சுந்தரா!

    பதிலளிநீக்கு
  2. உடனடியாய் கருத்திட்டு

    உற்சாகப்படுத்தியதற்கு நன்றி அக்கா!

    பதிலளிநீக்கு
  3. வீசிய வார்த்தை அம்புகளாய் நம்மை வந்தடையும். வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சுந்தரா,எத்தனை முறை உச்சி முகர்ந்தாலும் தகும் இந்த மாதிரி எளிய,நேரடிக் கவிதைகளை.ஆசுவாசப்படுத்துகிற எழுத்து.கருவும் தான்.அழகு அழகு தங்கையே.

    பதிலளிநீக்கு
  5. //அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
    அலைந்துகொண்டிருந்தன
    அக்கம் பக்கமெல்லாம்...//
    அருமை. சுந்தரா.

    பதிலளிநீக்கு
  6. //அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
    அலைந்துகொண்டிருந்தன
    அக்கம் பக்கமெல்லாம்//

    சொல்லைக்கொட்டினா அள்ளமுடியாது என்பது உண்மைதானே!!..

    பதிலளிநீக்கு
  7. //Madurai Saravanan said...
    வீசிய வார்த்தை அம்புகளாய் நம்மை வந்தடையும். வார்த்தைகளை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்!

    பதிலளிநீக்கு
  8. //காமராஜ் said...
    சுந்தரா,எத்தனை முறை உச்சி முகர்ந்தாலும் தகும் இந்த மாதிரி எளிய,நேரடிக் கவிதைகளை.ஆசுவாசப்படுத்துகிற எழுத்து.கருவும் தான்.அழகு அழகு தங்கையே.//

    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  9. //அம்பிகா said...
    //அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
    அலைந்துகொண்டிருந்தன
    அக்கம் பக்கமெல்லாம்...//
    அருமை. சுந்தரா.//

    வாங்க அம்பிகா...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //
    அமைதிச்சாரல் said...
    //அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
    அலைந்துகொண்டிருந்தன
    அக்கம் பக்கமெல்லாம்//

    சொல்லைக்கொட்டினா அள்ளமுடியாது என்பது உண்மைதானே!!..//

    ஆம் அமைதிச்சாரல்...அழகான பெயர் :)

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!