முன்னே வா பெண்ணே!

முன்னே வா முன்னே வா என்று
மும்முரமாய் அழைத்தார்கள்...

பின்னிருந்து தள்ளுகிற
தைரியத்தின் துணையோடு
முன்னேறிச் சென்று
சில அடிகள் வைத்தேன்...

ஆனால்,
சுற்றிலும் தெரிந்ததோ
முட்டுச்சுவர்கள் மட்டுமே...

ஆனாலும்,
முன்வைத்த காலைப்
பின்வைக்கத் தோன்றாமல்
அங்கேயே நிற்கிறேன்,
அனைத்தையும் கடக்கலாம் என்ற
அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்!

*************************************

கருத்துகள்

  1. "MAGALIRDINA VAZTHUKKAL"

    Karunaji

    பதிலளிநீக்கு
  2. //தீகுளித்த சீதை.
    மூக்கிழந்த சூர்ப்பநகை.

    முள்சுமக்கும் மல்லிகா
    முன்னேறிய மஞ்சுளா.//

    அருமை சுந்தரா.

    நிறைய்யப் பேசுகிறார்கள்.
    நிறைய்யப் பேசவைக்கிறார்கள்.

    ஆம் சதவிகிதம் சமமாகப்பாவித்தால்
    தேவையற்றுப்போய்விடும்.

    பதிலளிநீக்கு
  3. //அனைத்தையும் கடக்கலாம் என்ற
    அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்!//

    நம்பிக்கைதானே பலம் கொடுக்குது. அருமையான கவிதை..வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //அனைத்தையும் கடக்கலாம் என்ற
    அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்!//

    இந்த நம்பிக்கைதான் அவர்களை எப்போது உள்ளிருந்து செலுத்திக்கொண்டே இருக்கிறது. அருமை சுந்தரா!

    //சதவீதத்தைக் கூட்டினாலும்,
    சக மனுஷியாய்ப்
    பார்க்கமறுக்கிற சமூகத்தில்//

    ம்ம், ரொம்பச் சரி!

    பதிலளிநீக்கு
  5. // Anonymous said...
    "MAGALIRDINA VAZTHUKKAL"

    Karunaji//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கருணாஜி!

    பதிலளிநீக்கு
  6. //காமராஜ் said...
    //தீகுளித்த சீதை.
    மூக்கிழந்த சூர்ப்பநகை.

    முள்சுமக்கும் மல்லிகா
    முன்னேறிய மஞ்சுளா.//

    அருமை சுந்தரா.

    நிறைய்யப் பேசுகிறார்கள்.
    நிறைய்யப் பேசவைக்கிறார்கள்.

    ஆம் சதவிகிதம் சமமாகப்பாவித்தால்
    தேவையற்றுப்போய்விடும்.//

    நன்றிகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  7. //அமைதிச்சாரல் said...
    //அனைத்தையும் கடக்கலாம் என்ற
    அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்!//

    நம்பிக்கைதானே பலம் கொடுக்குது. அருமையான கவிதை..வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் அமைதிச்சாரல்!

    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. \\ஏதோ ஒரு புள்ளியில்,
    பெண்ணாகப் பிறந்துவிட்ட
    தன் விதியை நொந்தபடி...\\

    யதார்த்தத்தை சொல்லும் அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  9. //அனைத்தையும் கடக்கலாம் என்ற
    அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்!//

    இந்த நம்பிக்கைதான் அவர்களை எப்போது உள்ளிருந்து செலுத்திக்கொண்டே இருக்கிறது. அருமை சுந்தரா!

    //சதவீதத்தைக் கூட்டினாலும்,
    சக மனுஷியாய்ப்
    பார்க்கமறுக்கிற சமூகத்தில்//

    ம்ம், ரொம்பச் சரி!

    நன்றிக்கா!

    பதிலளிநீக்கு
  10. //அம்பிகா said...
    \\ஏதோ ஒரு புள்ளியில்,
    பெண்ணாகப் பிறந்துவிட்ட
    தன் விதியை நொந்தபடி...\\

    யதார்த்தத்தை சொல்லும் அருமையான வரிகள்.//

    நன்றி அம்பிகா!

    பதிலளிநீக்கு
  11. அப்படியெல்லாம் இக்காலத்தில் இல்லையென்றெ நான் சொல்வேன் அக்கா..

    பெண்கள் எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் முன்னேறி வருகின்றனர் என்பது கண்கூடக்காணும் உண்மையே..

    கவிகள் அருமை..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!