அவளை அப்படித்தான் அழைக்கிறார்கள்!

பொழுதுபோனதொரு
பின்மாலை நேரம்...
புழுதி மண்டிய
பிள்ளையார்கோயில் தெரு,
விழுது வீசிய
வயல்காட்டு ஆலமரம்,
அடியில் விளையாடி
அழுக்கான பிள்ளைகள்...

கூட்டுக்குத் திரும்புகிற
கூட்டப் பறவைகள்,
மாடுகளை உரசிக்கொண்டு
மடிதேடும் கன்றுகள்,
வேலைவிட்டுத் திரும்புகிற
வேக மனிதர்கள்,
விளம்பரம் வீசுகிற
அவசர வானொலி...

வட்டிப் பணம்கேட்டு
வசவு கக்கும் வசதிக்காரன்
புட்டிக்குப் பணம்கேட்டுச்
சண்டைபோடும் புருஷன்காரன்
சட்டியில் உலைகொதிக்க
உடன் கொதிக்கும் மனசுக்காரி
தீப் பெட்டிக்குப் பசைதடவி
ஒட்டிப்போன உடம்புக்காரி...

ஆகமொத்தம் எல்லாரும்
அழுத்தத்தில் தோய்ந்திருக்க,
பாதி ரொட்டியை
நாய்க்குக் கொடுத்துவிட்டு
மீதியைக் காப்பிக்குள்
முக்கிச் சுவைத்தபடி,
அவள் மட்டும் அங்கே
ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்...

ஆனால்,
அவளை அங்கே எல்லாரும்
அனாதையென்றும் கிறுக்கியென்றும்
அவதூறு சொல்லுகிறார்கள்!

கருத்துகள்

  1. //ஆகமொத்தம் எல்லாரும்
    அழுத்தத்தில் தோய்ந்திருக்க,
    பாதி ரொட்டியை
    நாய்க்குக் கொடுத்துவிட்டு
    மீதியைக் காப்பிக்குள்
    முக்கிச் சுவைத்தபடி,
    அவள் மட்டும் அங்கே
    ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்...//

    மனதில் நிற்கும் கவிதை...

    பதிலளிநீக்கு
  2. //பாதி ரொட்டியை
    நாய்க்குக் கொடுத்துவிட்டு
    மீதியைக் காப்பிக்குள்
    முக்கிச் சுவைத்தபடி,
    அவள் மட்டும் அங்கே
    ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்...

    ஆனால்,
    அவளை அங்கே எல்லாரும்
    அனாதையென்றும் கிறுக்கியென்றும்
    அவதூறு சொல்லுகிறார்கள்!//

    உண்மையாகவே கவிதை ”குறிஞ்சி ” தான்.

    பதிலளிநீக்கு
  3. I have not read the Lyric but to visualize the scenery. What a clarity!! , (not just in the mere meaningful words but in its hidden FACTS.)

    பதிலளிநீக்கு
  4. Sangkavi said...
    //ஆகமொத்தம் எல்லாரும்
    அழுத்தத்தில் தோய்ந்திருக்க,
    பாதி ரொட்டியை
    நாய்க்குக் கொடுத்துவிட்டு
    மீதியைக் காப்பிக்குள்
    முக்கிச் சுவைத்தபடி,
    அவள் மட்டும் அங்கே
    ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்...//

    மனதில் நிற்கும் கவிதை...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    சங்கவி!

    பதிலளிநீக்கு
  5. சத்ரியன் said...
    //பாதி ரொட்டியை
    நாய்க்குக் கொடுத்துவிட்டு
    மீதியைக் காப்பிக்குள்
    முக்கிச் சுவைத்தபடி,
    அவள் மட்டும் அங்கே
    ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்...

    ஆனால்,
    அவளை அங்கே எல்லாரும்
    அனாதையென்றும் கிறுக்கியென்றும்
    அவதூறு சொல்லுகிறார்கள்!//

    உண்மையாகவே கவிதை ”குறிஞ்சி ” தான்.

    வாங்க சத்ரியன்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //vasan said...
    I have not read the Lyric but to visualize the scenery. What a clarity!! , (not just in the mere meaningful words but in its hidden FACTS.)//

    thank you so much vasan!

    பதிலளிநீக்கு
  7. //இராமசாமி கண்ணண் said...
    நல்ல கவிதை.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமசாமி கண்ணன்!

    பதிலளிநீக்கு
  8. தமிழிஷ் ல் வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    நட்பு வட்டத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!

    பதிலளிநீக்கு
  9. திடுதிடுவென இழுத்துக்கொண்டு ஓடிப்போய் இறுதியில் கதிகலக்குகிறது எழுத்து. இது கவிதையில்லை இளகிய மனசுக்காரர்களின் உன்னத இலக்கியம். அவ்வளவு வார்த்தைகளையும் மடியில் கொட்டிக் கோர்த்திருக்கிறாய்.அழகிய சவுக்க¡¸.

    பதிலளிநீக்கு
  10. //காமராஜ் said...
    திடுதிடுவென இழுத்துக்கொண்டு ஓடிப்போய் இறுதியில் கதிகலக்குகிறது எழுத்து. இது கவிதையில்லை இளகிய மனசுக்காரர்களின் உன்னத இலக்கியம். அவ்வளவு வார்த்தைகளையும் மடியில் கொட்டிக் கோர்த்திருக்கிறாய்.அழகிய சவுக்க¡¸.//

    மிக்க மகிழ்ச்சி :)

    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!