அப்பாக்கள் பொய்சொல்கிறார்கள்!

பொய்சொன்ன வாய்க்கு
போசனம் கிடைக்காதுடா தம்பி,
பொருத்தமான முன்னுரையோடுதான்
பேசத்தொடங்குவாள் அம்மா...

அப்பா இப்பல்லாம்
அதிகம் பேசுவதில்லை
அப்படியே பேசினாலும்
அதிகமாய்ப் பொய்தான்,
தட்டில் சோற்றோடு
வருத்தத்தையும் முன்வைப்பாள்...

குழம்பு ஊற்றாமல்
சுணங்குவதிலிருந்து
குழம்பிப் போயிருக்கிறாளென்று
குழப்பமில்லாமல் தெரியும்...

ஆனால்,
அப்பனுக்குத் தப்பாத
அழுத்தக்காரப் பிள்ளையென்று
எப்போதும் என்னைச்
சொல்ல முடியாதபடி,
மனசைத் திறந்துவைத்தேன்
மனைவிக்கு முன்னாடி...

ஆயிரம் கேள்விகள்
அனைத்துக்கும் கவலை
வரவுசெலவு கேட்டு
வறுத்தெடுக்கும் விசாரணை
ஆக மொத்தத்தில்,
கிட்டியதென்னவோ
முட்டாளென்னும் பட்டம்தான்...

போதுமடா சாமீன்னு
வேகவேகமாய்த் திரும்பிவிட்டேன்
அப்பா கடைப்பிடித்த
அருமையான வழிக்கே...

ஆனாலும்
அடிக்கடி முணுமுணுக்கிறது வாய்,
"அம்மா, என்னையும்
மன்னித்துவிடு" என்று!

கருத்துகள்

  1. இதுதான் சுழற்சி என்பதோ? நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள‌ சுந்த‌ரா,

    அப்பா தாத்தாவிட‌மிருந்து
    க‌ற்றிருப்பாரோ !!!
    பிள்ளைக‌ள் ந‌ம்மிட‌மிருந்து.
    கால‌ச்ச‌க்க‌ர‌ம் கை பிடித்து
    சுழ‌ற்றுகிர‌தோ ?

    பதிலளிநீக்கு
  3. மற்றொரு நல்ல கவிதை சுந்தரா

    பதிலளிநீக்கு
  4. //vasan said...
    அன்புள்ள‌ சுந்த‌ரா,

    அப்பா தாத்தாவிட‌மிருந்து
    க‌ற்றிருப்பாரோ !!!
    பிள்ளைக‌ள் ந‌ம்மிட‌மிருந்து.
    கால‌ச்ச‌க்க‌ர‌ம் கை பிடித்து
    சுழ‌ற்றுகிர‌தோ ?//

    நன்றிகள் வாசன்.

    அப்படித்தான் இருக்கவேண்டும் :)

    பதிலளிநீக்கு
  5. //காமராஜ் said...
    மற்றொரு நல்ல கவிதை சுந்தரா//

    நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. நல்லாருக்கு சுந்தரா. நினைத்துப் பார்க்கும்போது, நாம் கிட்டத்தட்ட நம் அம்மாவைப் போல் ஆவதற்கும் இதுபோல காரணங்கள் இருக்குமோ ஒருவேளை!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!