சுடச் சுடரும் சம்சாரம்??!

காலையில இன்னிக்கு
கவிதையொண்ணு எழுதினேன்,
நாலுவரி படிக்கிறேன்
புடிச்சிருக்கா சொல்லுங்க...

சட்டைக்குப் பித்தானைத்
தச்சு வைக்கச்சொல்லி
பத்துநாளாச் சொல்லுறேன்,
பத்திரிகைக்கு எழுதித்தான்
பாழப் போச்சுதுபோ...

சந்தைக்குப் போனப்ப
அவரைக்காய் வாங்கினேன்,
உங்களுக்குப் பிடிச்சதுபோல்
கறிசமைச்சு வச்சிருக்கேன்...

என்னத்த சமைச்சுவச்சு
என்னதான் போட்டியோ,
ரத்தத்தில் சர்க்கரையும்
கொதிப்பும்தான் கூடிப்போச்சு...

நல்லபடம் வந்திருக்குன்னு
நளினியக்கா சொன்னாங்க,
ஞாயித்துக் கிழமையில
நாமளும் போகலாமா?

நம்மவீட்டுக் கதையவச்சே
நாலுபடம் எடுத்துரலாம்
இன்னுமென்ன புதுக்கதையை
அங்கபோயி பாக்கப்போறே?

பள்ளிக்கூட லீவுக்கு
பாட்டிவீட்டுக்குப் போவோம்னு
புள்ளைக சொல்றாங்க
பத்துநாள் போகவா?

ஒத்தையா உட்டுட்டு
உறவாடக் கேக்குதோ?
சோத்தைப் பொங்கினமா
வீட்டைப் பாத்தமான்னு
'சிவனே'ன்னு இரு...
புள்ளைங்க ரெண்டுபேரும்
போயிட்டு வரட்டும்!

கருத்துகள்

  1. ENNAKKA

    EN VEETU KATHAIYAI ILLA IRUKKU

    KK

    பதிலளிநீக்கு
  2. அநேகர் வீட்டுல இதே கதைதான் KK தங்கச்சி :)

    பதிலளிநீக்கு
  3. சோத்தைப் பொங்கினமா
    வீட்டைப் பாத்தமான்னு
    'சிவனே'ன்னு இரு.../
    எதார்த்த வரிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ரோடு ரோலருக்குள்
    நசுங்கும் சின்னச்சின்ன மின்மினிகள்.
    நசுக்கப்பட்டவைகளை ஒன்று கோர்த்து
    பொறுமை மாலை போடலாம்.

    எவ்வளவு கஷ்டப்படுத்துறோம் நாங்க?

    பதிலளிநீக்கு
  5. பல வீடுகளிலும் இதே கதைதான். உள்ளத்தைத் தொடுமாறு சொல்லியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  6. //Vidhoosh(விதூஷ்) said...
    :) என்னவோ போடா மாதவா!!//

    :) நன்றி விதூஷ்!

    பதிலளிநீக்கு
  7. //Madurai Saravanan said...
    சோத்தைப் பொங்கினமா
    வீட்டைப் பாத்தமான்னு
    'சிவனே'ன்னு இரு.../
    எதார்த்த வரிகள். வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!