மனிதக் கூடுகள்



நெட்டையாக வளர்ந்திருக்கும்
கட்டிடக் காடுகள்...

ஒற்றைவீட்டு இடப்பரப்பில்
கற்றையாக வீடுகட்டி
பெட்டி நிறைக்கின்ற
பட்டணத்து வித்தைகள்...

சட்ட மடித்துவைத்த
கைப்பிடிச் சுவற்றினில்
கட்டிடத்துக் கிழிசல்களாய்
அசைந்துகாயும் ஆடைகள்...

ஒட்டிவைத்த வாசல்கோலம்
தொட்டிவைத்த குறுஞ்செடிகள்
தீப்பெட்டிக் குச்சிகளாய்
அடுக்குகளில் மனிதர்கள்...

ஊஞ்சலாடும் பால்பைகள்
ஓடியாடும் பிள்ளைகள்
மாடிவீட்டுச் சன்னல்களில்
முகம்தேடும் இளைஞர்கள்...

தோளுரசிச் சென்றாலும்
ஏறெடுத்துப் பார்க்காமல்
வேகமாய்ப் படியிறங்கும்
வேலைநேர மனிதர்கள்...

அடுத்தடுத்து வாசல்கள்
அழுத்தமான நிஜமுகங்கள்
ரசனைகளைத் தொலைத்தபடி
நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.

கருத்துகள்

  1. நல்லா சொல்லியிருக்கீங்க நகர வாழ்க்கையை.

    //ஒட்டிவைத்த வாசல்கோலம்
    தொட்டிவைத்த குறுஞ்செடிகள்//

    ம்ம்! ம்ம்:)!

    பதிலளிநீக்கு
  2. //தோளுரசிச் சென்றாலும்
    ஏறெடுத்துப் பார்க்காமல்
    வேகமாய்ப் படியிறங்கும்
    வேலைநேர மனிதர்கள்...//

    சரியாகச் சொல்லியிருக்கறீங்க...

    பதிலளிநீக்கு
  3. //ராமலக்ஷ்மி said...

    நல்லா சொல்லியிருக்கீங்க நகர வாழ்க்கையை.

    //ஒட்டிவைத்த வாசல்கோலம்
    தொட்டிவைத்த குறுஞ்செடிகள்//

    ம்ம்! ம்ம்:)! //

    நன்றிகள் அக்கா!

    பதிலளிநீக்கு
  4. //Sangkavi said...

    //தோளுரசிச் சென்றாலும்
    ஏறெடுத்துப் பார்க்காமல்
    வேகமாய்ப் படியிறங்கும்
    வேலைநேர மனிதர்கள்...//

    சரியாகச் சொல்லியிருக்கறீங்க...//

    நன்றி சங்கவி!

    பதிலளிநீக்கு
  5. அப்பாட எவ்வளவு நாளாச்சு, என் பிறந்த வீட்டுக்கு வந்து.
    சந்தங்களும் தொலையாத,அர்த்தங்களும் பிறழாத தாளக்கவிதை இது.
    நல்லாருக்கு சுந்தரா.

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி அண்ணா, நெகிழ்ச்சியும்கூட...

    பிறந்தவீடுன்னு சொல்லிட்டீங்க. நினைக்கும்போதெல்லாம் வரலாம் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!